நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து காமெடி கலந்த கமர்ஷியல் படங்களை கொடுத்து ஓடி கொண்டிருப்பதால் அவரது திரைப்படங்கள் பெரிதும் வெற்றி படங்களாக மாறின. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் விஜய்க்கு அடுத்து தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து இவர் ஓடிக் கொண்டிருக்கிறார்.
தனக்கு என்ன வருமா அதை சரியாக செய்து கொண்டிருப்பதால் அவரது மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்கிறது அதற்கு ஏற்றார் போல தனது சம்பளத்தையும் ஒவ்வொரு படமும் வெற்றி பெறும் பொழுதும் கணிசமாக உயர்த்தி வருகிறார். இவர் கடைசியாக நடித்த டாக்டர், டான் ஆகிய இரண்டு திரைப்படங்களுமே வசூல் ரீதியாக வெற்றி பெற்றது அதனை தொடர்ந்து..
தீபாவளி முன்னிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து வெற்றி நடை கொண்டு வரும் திரைப்படம் பிரின்ஸ் இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று சூப்பராக ஓடிக்கொண்டிருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் பற்றி ஒரு தரமான தகவல் வெளியாகி உள்ளது அதாவது ஆரம்பத்தில் சின்னத்திரை , குறும்படம் போன்றவற்றின் நடித்து..
படிப்படியாக தனது திறமையை வளர்த்துக் கொண்டு சினிமா உலகில் கால் பதித்தார். பிறகு ஒரு கட்டத்தில் இயக்குனர் அட்லீயுடன் கைகோர்த்து ராஜா ராணி திரைப்படத்தில் நடிக்க அதிகம் ஆர்வம் காட்டினார் ஆனால் சில காரணங்களால் அவர் இந்த படத்தில் இருந்து விலகவே பிறகு அவருக்கு பதிலாக..
ஆர்யா, ஜெய் போன்றவர்கள் ஹீரோவாகளாக நடித்து படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக நின்றனர் ஆனால் உண்மையில் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தால் அந்த படத்தின் ஹீட் இன்னும் அதிகரித்து கொடுக்கும் என கூறப்படுகிறது எது எப்படியோ ஒரு சூப்பர் ஹிட் பட வாய்ப்பு அவர் விட்டு விட்டார்.