இந்த அனைத்து முன்னணி நடிகர்களையும் ஆட்டி வைக்கும் சன் நிறுவனம்..!! தமிழ் சினிமா அடிமையாக போகிறதா..?

sun-picture
sun-picture

தற்போது உள்ள நிறுவனங்களில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் பிரபலமாக இருந்து வருகிறது.அந்த வகையில் முன்பெல்லாம் தயாரிப்பாளர்கள் தனியாக நின்று நம்பிக்கையுடன் படங்களை தயாரித்து வருவார்கள். ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவை காப்பரேட் நிறுவனத்திற்கு குத்தகை கொடுத்து போல் அடிமையாகி வருகிறார்கள்.

அந்த வகையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரே நேரத்தில் பல முன்னணி நடிகர்களை வைத்து பல கோடி பட்ஜெட்டில் படங்களை தயாரித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து அண்ணாத்த, விஜயை வைத்து தளபதி 65,சூர்யாவை வைத்து சூர்யா 40,விஜய் சேதுபதியை வைத்து பொன்ராம் மற்றும் தனுஷை வைத்து D44 போன்ற படங்களை தயாரித்து வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் இவர்களைத் தொடர்ந்து தல அஜித் மற்றும் சிவகார்த்திகேயனிடம் அடுத்த படங்களில் நடிப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்.எனவே தமிழ் திரையுலகில் இருந்து வரும் அனைத்து முன்னணி நடிகர்களையும் சன் பிச்சர்ஸ் நிறுவனம் வலைத்துப் போட்டு உள்ளார்கள் என்று தான் கூற வேண்டும்.

sunpictures-upcoming-movies
sunpictures-upcoming-movies

அந்த வகையில் நடிகர்களும் தங்களது பேராசை காரணமாக இப்படி சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு அடிமையாகி விட்டார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்னும் சில காலங்களில் தமிழ் சினிமா முழுவதும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு அடிமையாகி விடும் போல.

இவ்வாறு முன்னணி நடிகர்கள் அனைவரும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் திரைப்படங்களில் நடிப்பதற்கு முக்கிய காரணம் அதிகப்படியான சம்பளம் என்றுதான் கூற வேண்டும்.  இவ்வாறு பணத்திற்கு ஆசைப்பட்டு சன் பிக்சர்ஸ் நிறுவனத்திலேயே நடிப்பார்களா அல்லது தனியாக தயாரிக்கும் தயாரிப்பாளர்களின் திரைப்படங்களில் அடிப்பார்களா என்று விரைவில் தெரியவரும்.

எனவே தற்பொழுது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் பல குழப்பங்கள் எழுந்துள்ளதால் கோலிவுட் வட்டாரங்கள் மற்றும் ரசிகர்கள் என்று அனைவரும் தங்களது பல கமெண்டுகளை   இணையதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.