தளபதி விஜய் அவர்கள் சமீபத்தில் நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் வெளியான பீஸ்டு திரைப்படத்தை தொடர்ந்து தன்னுடைய அடுத்த திரைப்படத்தில் மிக விறுவிறுப்பாக நடித்துக்கொண்டிருக்கிறார் இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தினை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி அவர்கள் இயக்கி வருகிறார்.
மேலும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது இவ்வாறு வெளிவந்த அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆனது முழுக்க முழுக்க போட்டோஷாப் நிறைந்தது போல் அமைந்தது இதனால் பல்வேறு ரசிகர்களும் அதிர்ச்சியில் இருந்தார்கள்.
மேலும் இந்த போஸ்டரை ரஜனி கோபி பிரசன்னா அவர்கள் வடிவமைத்துள்ளார் இவர் ஏற்கனவே தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில், பீஸ்ட், மாஸ்டர், மெர்சல், போன்ற பல்வேறு திரைப்படங்களில் போஸ்டர்களை உருவாக்கியவர் ஆவர் அதுமட்டுமில்லாமல் போஸ்டரில் தளபதி விஜய் அவர்கள் கோட் சூட் அணிந்து மிகவும் ஸ்டைலாக இருக்கும் படி காட்டப்பட்டிருந்தது.
ஆனால் அவருக்கு பின்னால் இருக்கும் கிராபிக்ஸ் ஆனது கூகுலிலிருந்து எடுக்கப்பட்டது தெரியவந்த நிலையில் நெட்டிசன்கள் பலரும் இந்த போஸ்டரை விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். எனவே தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரை படம் படுதோல்வி அடைந்த நிலையில் திரைப்படத்தில் இப்படி ஒரு சிக்கலா என அதிர்ச்சியில் உள்ளார்கள்.
அதன் பிறகு இரண்டாம் கட்ட போஸ்டரை வெளியிட்டு இந்த பிரச்சனையை சரிசெய்து விடலாம் என நினைத்த படக்குழுவினருக்கு மறுபடியும் ஏமாற்றம் தான் மிஞ்சியது ஏனெனில் அந்த போஸ்டரில் தளபதி விஜய் படையப்பாவில் ரஜினி நடித்திருப்பது போல் அமைந்துள்ளது.
ஏற்கனவே தளபதி பர்ஸ்ட் லுக் போஸ்டர் மண்ணைக்கவ்வியதை தொடர்ந்து இரண்டாம் லுக் போஸ்டரும் கடும் கோபத்தை ஏற்படுத்தி விட்டது இந்நிலையில் தளபதி விஜயின் முகம் இளம் வயது போல் இருப்பது மட்டுமில்லாமல் இவை முழுக்க முழுக்க கிராபிக்ஸ் என்று தெரியவந்த நிலையில் இன்று திரைப்படத்தின் பெயர் கூட தளபதிக்கு ஏற்றார்போல் இல்லை என ரசிகர்கள் மனவருத்தத்தில் உள்ளார்கள்.
இது ஒரு பக்கம் இருக்க இந்த போஸ்டர்களை டிசைன் செய்வதற்காக மட்டுமே தயாரிப்பு நிறுவனம் 14 லட்சம் கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது . இதுவரை வெளி வந்த தகவலை பார்த்த ரசிகர்கள் என்ன செஞ்சும் ஒன்னும் பிரயோஜனம் கிடையாது என கிண்டல் அடித்து வருகிறார்கள்.