நடிகர் விஜய்க்கு “சயின்ஸ் பிக்சன்” கதையை கூறிய வெற்றி இயக்குனர் – யாருன்னு தெரிஞ்ச தூக்கி வாரிப்போடும்..

vijay
vijay

தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வசூல் மன்னனாக வலம் வருவர் தளபதி விஜய். இப்பொழுது தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் முதல் முறையாக கைகோர்த்து தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளார் படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் ஆக இருக்கிறது.

இதுவரை ஆக்ஷன் படங்களில் நடித்து வந்த இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு குடும்ப செண்டிமெண்ட் படத்தில் நடித்திருப்பது தற்பொழுது வாரிசு படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது. வாரிசு படத்தை வெற்றிகாரமாக விஜய் முடித்துவிட்டு அடுத்ததாக தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார்.

அதற்கான வேலைகளில் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது இந்த படத்தை தொடர்ந்து விஜய் அட்லீ உடன் இணையப் போகிறார் என பேசப்பட்டு வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு கோமாளி, லவ் டுடே படத்தை இயக்கி வெற்றி கண்ட பிரதீப் ரங்கநாதன் சமீபத்தில் விஜய்க்கு ஒரு கதையை சொல்லி இருக்கிறேன் என கூறினார்.

இதனால் விஜயை வைத்து அவர் படம் பண்ண போவதாக பெரிய அளவில் பேசப்பட்டது இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் பிரதிபரங்கநாதன்  பேட்டி ஒன்றில் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார் ஆதில் அவர் சொன்னது.. தளபதி விஜய்க்கு சயின்ஸ் பிக்சன் கதை ஒன்றை சொல்லி இருக்கிறேன் அவருக்கும் கதை பிடித்து விட்டது.

ஆனால் அவர்களது தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் வரை இதைப்பற்றி நான் பேச மாட்டேன் என கூறியிருந்தார். தளபதி 67 படம் முடிவதற்குள் எப்படியும் தெரிந்துவிடும் அடுத்தது விஜய் இயக்குனர் அட்லீ அல்லது பிரதீப் ரங்கநாதன்.. இருவர்களில் யாராலும் ஒருவருடன் இணைப்பது கன்பார்ம் என சொல்லப்படுகிறது..