ரஜினி படத்தின் வெற்றியே விஜயின் மின்சார கண்ணா படத்தின் தோல்விக்கு முக்கிய காரணமாம் – பல வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மை தகவல்.

rajini-and-vijay
rajini-and-vijay

90 காலகட்டங்களில் பல்வேறு டாப் ஜாம்பவான்களை  வைத்து சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தால் இன்று அளவிலும் மக்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாடும் இயக்குனராக வலம் வருபவர் கே. எஸ். ரவிக்குமார்.

இவர் இயக்குனர் என்ற அந்தஸ்தையும் தாண்டி தற்போது குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் முக்கிய ரோல்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தியது படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் பல வருடங்கள் கழித்து தற்போது ஒரு சூப்பரான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது அதாவது கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகி பட்டைய கிளப்பிய திரைப்படம் படையப்பா. இந்த திரைப்படத்தில் இவருடன் இணைந்து நடிகர் திலகம் சிவாஜி, ரம்யா கிருஷ்ணன் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படம் அப்பொழுது வெளிவந்து யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு வெற்றியை பெற்றது. இந்த படம் பல நாள் ஓடியது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து கேஎஸ் ரவிக்குமார் மின்சார கண்ணா என்ற திரைப்படத்தை எடுத்து இருந்தார் ஆனால் இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் எடுபடவில்லை என்று கூற வேண்டும்.

ஏனென்றால் சூப்பரான படையப்பா படத்தை கொடுத்ததால் மின்சார கண்ணா என்ற திரைப்படத்தையும் ரசிகர்கள் பெரிய அளவில் எதிர் பார்த்தனர் ஆனால் அந்த அளவுக்கு அதில் நடித்தவர்கள் தனது திறமையை காட்டினாலும் பெரிய அளவு அந்த படம் எடுபடவில்லை. அதற்கு முக்கிய காரணம் படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு வேற லெவெலில் இருந்தது.

அது போல மின்சார கண்ணா  படத்தில் குஷ்புவின் நடிப்பு அந்த கதாபாத்திரத்தில் அழுத்தமாக இல்லாதால் படம் வெற்றி பெறவில்லை என கூறப்பட்டுள்ளது.