திரையுலகை பொறுத்தவரை இயக்குனர்களை நாம் தனித்தனியாகப் பிரித்து விடலாம் ஏனென்றால் ஒரு சில இயக்குனர் அதிரடியான மசாலாப் படங்களை எடுப்பார்கள் ஒரு சில இயக்குனர்கள் காதல் சம்பந்தப்பட்ட படங்களை இயக்கி வெற்றி கொண்டிருப்பார்கள் அந்த வகையில் இயக்குனர் ஹரி எப்பொழுதும் அதிரடியான மசாலா படங்களை கொடுத்து மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இவர் ஆரம்பத்திலிருந்து தற்போது வரையும் அதிரடி படங்களையே கொடுத்து உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.ஹரி 2002 ஆம் ஆண்டு பிரசாந்தை வைத்து “தமிழ்” என்னும் அதிரடி படத்தைக் கொடுத்தார் அதன்பிறகு சாமி, கோவில், அருள், ஐயா, ஆறு, தமிரபரணி, வேல், சேவல், சிங்கம் போன்ற அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்தார்.
அதிலும் குறிப்பாக சூர்யாவை வைத்து பல ஹிட் படங்களை கொடுத்து அவரை சினிமா உலகில் நல்லதொரு இடத்திற்கு தூக்கி வைத்த இயக்குனர்களில் ஒருவர் ஹரி. ஹரி தற்போது தனது மச்சான் நடிகர் அருண் விஜய்யை வைத்து “யானை” என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்து வைரலானது.
இந்த படத்திற்கு முன்பாகவே சூர்யாவும், ஹரியும் மீண்டும் ஒருமுறை இணைய இருந்தனர் அந்த அந்த படத்திற்கு “அருவா” என பெயர் சூட்டப்பட்டு புகைப்படம் எல்லாம் வெளியாகின இதனால் ரசிகர்கள் சந்தோஷத்தில் இருந்து வந்த நிலையில் சூரிய அருவா படத்தில் இருந்து திடீரென விலகினார்.
இது இயக்குனர் ஹரிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது தனது படத்திலிருந்து திடீரென சூர்யா விலகியதால் தற்பொழுது அருண் விஜய்யை வைத்து யானை என்ற படத்தை எடுத்து வருகிறார். சூர்யா நடிக்க வேண்டிய கதையில் தற்போது அருண்விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூர்யாவுக்கு ஒரு மிகப்பெரிய ஒரு பாடமாக இருக்கும் என்று யானை படக்குழுவினருக்கு ஹரி உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.