தமிழ் சினிமாவில் தற்போது தல அஜித் நடிப்பில் வலிமை என்ற திரைப்படம் உருவாகி உள்ளது இத்திரைப்படத்தை இயக்குனர் வினோத் இயக்குவது மட்டுமல்லாமல் தயாரிப்பாளராக போனிகபூர் இடம்பெற்றுள்ளார்.
இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தில் வில்லனாக நடித்து தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டி உள்ளவர்தான் கார்த்திகேயா. இவர்தான் நடித்த படம் புரமோஷன் விழாவில் தன்னுடைய காதலியை புரோபோசல் செய்த காட்சியானது சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.
இவர் வலிமை திரைப்படத்திற்கு முன்பாகவே ராஜா விக்ரமாதித்தன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்நிலையில் இந்த திரைப்படத்தின் புரமோஷன் விழா சமீபத்தில் மிக பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில் தன்னுடைய காதலிக்கு மண்டியிட்டு மலர் கொடுத்து ப்ரொபோஸ் செய்துள்ளார்.
இவ்வாறு அவர் செய்த செயலானது ரசிகர்களை பெருமளவு கவர்ந்து விட்டது. மேலும் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி தான் கார்த்திகேயனுக்கு லோகிதா ரெட்டி உடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது இந்நிலையில் நவம்பர் 21ஆம் தேதி தங்களுடைய திருமணம் என்பதையும் அந்த விழாவில் அறிவித்துள்ளார்.
மேலும் இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என பலரும் கலந்துகொள்ள உள்ளார்கள். இந்நிலையில் இடையே உள்ள காலத்தில் கார்த்திகேயா மற்றும் லோகிதா ஆகிய இருவரும் காதலர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு திருமணத்திற்கு முன்பு தங்களுடைய காதலை மிக சிறப்பாக வெளிக்காட்டி வரும் இந்த ஜோடியை பார்த்து பலரும் ஆச்சரியப்படும் அதுமட்டுமில்லாமல் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.