எதிர்பார்க்காத இடத்தில் வசூலில் அடித்து நொறுக்கும் வலிமை – இனி அது அஜித் கோட்டை தான்.! எங்கு தெரியுமா.?

valimai
valimai

நடிகர் அஜித்குமார் சினிமாவுலகில் தான் உண்டு தன் வேலை உண்டு இருந்தாலும் ரசிகர்களுக்கு அவரது செயல் பிடித்து போய் உள்ளதால் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர் அதன் காரணமாக தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத நபராக உள்ளார் மேலும் ரசிகர்கள் தன்னை நம்பி உள்ளனர்.

என்பதை ஒரு கட்டத்தில் உணர்ந்துகொண்ட அஜித்தும் தொடர்ந்து சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார் அந்த வகையில் விசுவாசம், நேர்கொண்ட பார்வை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து வலிமை  படமும் ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்தும் வைத்துள்ளதால் ரசிகர்களையும் தாண்டி பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்து இழுத்துள்ளது.

மேலும் படக்குழு நினைக்காத வரவேற்ப்பை தற்பொழுது மக்களும் ரசிகர்களும் கொடுத்து வருகின்றனர் இதனால் நாளுக்கு நாள் கூட்டம் அதிகமாகிறது.  விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அடித்து நொறுக்குகிறது தமிழ் சினிமாவில் இதுவரை மட்டும்  வலிமை படம் 100 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது.

மற்ற இடங்களிலும் நல்ல வரவேற்ப்பை பெற்று வருவதால் படக்குழு செம்ம சந்தோஷத்தில் இருக்கிறது அதே சமயம் விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் சந்தோஷத்தின் உச்சியில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு சில இடத்தில் வலிமை திரைப்படம் பெரிய வசூல் வேட்டையை நடத்த வில்லை.

அதே சமயம் ஒரு சில இடத்தில் எதிர்பார்க்காத வசூலையும் பெற்று கொடுத்து வருகிறது . அந்த வகையில் ஆந்திராவில் முதல் வாரத்தில் மட்டுமே 7.5 கோடி வலிமை படம் வசூலித்தது இரண்டாவது வாரத்தில் ஆரம்பத்திலேயே நல்ல வரவேற்பு இருந்து வருவதால் நல்லதொரு வசூலை அள்ளும் என கணக்கிடப்பட்டுள்ளது.