சிவகார்த்திகேயனை திக்குமுக்காட வைத்த வலிமை, RRR படம் – வெளிவந்த முக்கிய அப்டேட்.

ton
ton

சமீபகாலமாக மிகப் பெரிய பட்ஜெட் படங்கள் எடுக்கப் பட்டிருந்தாலும் திரையரங்கில் வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் படத்தின் பட குழு படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி மாற்றி அமைத்து வண்ணமே வருகிறது அந்த வகையில் மிகப் பெரிய பட்ஜெட் படங்களாக தற்பொழுது பார்க்கப்படுவது  RRR, வலிமை ஆகிய படங்கள்தான்.

இந்த படங்கள் முதலில் பொங்கலுக்கு வெளியாக குறி வைத்தது ஆனால் கொரோனா மூன்றாவது கட்ட அலை வேகம் எடுத்து அதன் காரணமாக ரிலீஸ் தேதியை மாற்றி கொண்டது. அதில் குறிப்பாக வலிமை படம் பொங்கல் ஜனவரி 13ம் தேதி வெளியாக இருந்து தற்போது ஒரு வழியாக பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக சொல்லி உள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அதுக்கு அடுத்த மாதம் தெலுங்கு சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் என்ற அந்தஸ்தை வைத்திருக்கும் ராஜமௌலி தனது பிரம்மாண்ட படமான RRR படத்தை மார்ச் மாதம் அதாவது ம 25ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனால் சிவகார்த்திகேயனின் டான் படம் வெளியிட முடியாமல் தற்போது தள்ளாடி வருகிறது மேலும் படத்தின் ரிலீஸ் தேதியை வேறு ஒரு நாளில் தள்ளி வைத்துக் கொள்ளலாம் என முடிவு எடுக்கப்படும் என தெரியவருகிறது.  சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக வலிமை, RRR ஆகியவை தான் இருக்கிறது என்று பார்த்தால்..

பிப்ரவரி 10ஆம் தேதி கூட சூரியாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் கூட ரிலீசாகிறது இதனால் முன்னாடியும் பின்னாடியும் அவ்வளவு சீக்கிரத்தில் வெளியிட முடியாத சூழல் சிவகார்த்திகேயன் படத்திற்கு அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.