படம் வெளிவருவதற்கு முன்பாகவே படத்தின் பட்ஜெட்டை தாண்டி பல கோடி லாபம் பார்த்த வலிமை.?

valimai
valimai

அஜித் நடிப்பில் ஹச். வினோத் இயக்கத்தில் பிரமாண்ட பொருட்செலவில் போனிகபூர் தயாரித்துள்ள திரைப்படம் வலிமை இந்த படம் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தாலும் ஒரு வழியாக நீண்ட இடைவெளிக்கு பிறகு படக்குழு வெற்றிகரமாக படத்தை எடுத்து  முடித்துள்ளது இந்த படம் அடுத்த வருடம் குறிவைத்து உள்ளது.

இந்தப் படத்தில் அஜித்துடன் கைகோர்த்து கார்த்திகேயா, ஹுமா குரேஷி, யோகிபாபு மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர் இந்த படத்தில் இருந்து இதுவரை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், glimpse வீடியோ, வேற மாதிரி பாடல், அம்மா பாடல் ஆகியவைகளை தொடர்ந்து அண்மையில் வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ வெறித்தனமாக இருந்தது.

மேலும் தல ரசிகர்களை கொண்ட வைத்ததோடு மட்டுமல்லாமல் படத்திற்காக படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்த நிலையில் மறுபக்கம் வலிமை  படம் வெளிவருவதற்கு முன்பாகவே லாபம் பார்த்து வந்துள்ளதாக பிரபல மூத்த பத்திரிகையாளர் ஒருவர் ரிப்போர்ட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வலிமை திரைப்படத்தை போனிகபூர் பிரம்மாண்ட பொருட்செலவில் அதாவது 150 கோடி பட்ஜெட்டில் இந்த திரைப்படத்தை உருவாக்கி உள்ளனர்.ஆனால் தற்பொழுது வரையிலுமே வலிமை திரைப்படம் 161 ஒரு கோடி அளவுக்கு விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன் மூலம் வலிமை படத்தின் பட்ஜெட்டையும் தாண்டி11 கோடி லாபம் பார்த்து உள்ளது படக்குழு. படம் வெளிவருவதற்கு முன்பாகவே இவ்வளவு கோடி லாபம் பார்த்து உள்ளது பெரிய விஷயம் என கூறப்படுகிறது. வலிமை படம் வெளிவந்தால் இன்னும் பல கோடிகளை அள்ளி புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.