படம் வெளிவருவதற்கு முன்பே பல கோடி ரசிகர்களை கவர்ந்த வலிமை.! அதுக்கு இதுவே சாட்சி.? உற்சாகத்தில் தல ரசிகர்கள்.

valimai

திரையுலகில் பல்வேறு வெற்றிகளை கொடுத்தாலும் தற்போதும் வெற்றியை கொடுக்க அயராது சினிமாவில் ஓடி கொண்டிருப்பவர் தல அஜித். அந்தவகையில் விஸ்வாசம், நேர்கொண்டபார்வை படத்தை தொடர்ந்து ஹச். வினோத்துடன் இரண்டாவது முறையாக கைகோர்த்து வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படம் இரண்டு வருடங்களாக எடுக்கப்பட்டு வந்த நிலையில் ஒரு வழியாக சமீபத்தில் இந்தப் படத்தின் ஷூட்டிங் முழுவதும் முடிந்தது. தற்பொழுது வலிமை படக்குழு படத்தை வெளியிட தயாராக இருக்கிறது அந்த வகையில் இந்த திரைப்படம் தீபாவளியை குறி வைத்துள்ளது .

அந்த நிலையில் ரஜினியின் திரைப்படமும் தீபாவளியை குறி வைத்துள்ளதால் தற்போது அஜித்தின் வலிமை திரைப்படம் பின்வாங்கும் என கூறப்படுகிறதே ஏற்கனவே ஒரு தடவை இரண்டு நட்சத்திரங்களும் மோதியதில் அஜித் ஜெயித்தார். ஆனால் இருவரும் மோதிக் கொண்டால் வசூலில் மிகப்பெரிய அளவில் பாதிக்கும் என்பதால் தற்போது அதை புரிந்துகொண்டு வலிமை படம் தற்போது வேறு தேதியில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் வலிமை படக்குழு படத்தை பற்றி அவ்வப்போது சில தகவல்களை கொடுத்து வருகிறது அந்த வகையில் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர்கள் வெளிவந்து ரசிகர்களை கொண்டாட வைத்தது. அதன் பிறகு வலிமை படத்தில் இடம்பெற்ற வேற மாதிரி பாடல் வெளியாகி ரசிகர்களை மேலும் சந்தோஷ உச்சிக்கே அழைத்துச் சென்றது.

இந்த பாடலை தொடர்ந்து அடுத்த பாடலோ அல்லது டீசர் வெளிவர வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் கேட்டுக் கொண்டு வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. வலிமை படத்தில் இடம்பெற்றுள்ள வேற மாதிரி பாடல் அதாவது இந்த பாடல் இதுவரை 25 மில்லியன் பேர் இந்த பாடலை பார்த்து மகிழ்ந்துள்ளனர். இச்செய்தியை பல ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர்.

valimai
valimai