USA – ல் மாஸ் காட்டும் வலிமை – முன்பதிவில் பல லட்சங்களை அள்ளிய சம்பவம்.! ரஜினி அடுத்தது AK தான் போல..

valimai
valimai

நடிகர் அஜித் விசுவாசம், நேர்கொண்டபார்வை திரைப்படத்திற்கு பிறகு இரண்டு வருடங்கள் கழித்து ஒரு வழியாக பிப்ரவரி 24ஆம் தேதி வெளிவரும் திரைப்படம்தான் வலிமை. இந்த படத்தின் அப்டேட்காக ரசிகர்கள் ஒரு பாடு பட்ட நிலையில் தற்போது படத்தை பார்க்க அல்லாடி வருகின்றனர்.

எப்படியோ ஒரு வழியாக படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதால் ரசிகர்கள் ஒரு பக்கம் சந்தோசம் மறு பக்கம் எதிர்நோக்குகின்றனர். ரசிகர்களுக்கு இந்த படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றியாக அமையும் வகையில் ஹச். வினோத் எடுத்துள்ளாராம் படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இருக்கும் என பார்க்கப்படுகிறது. அதே சமயம் சென்டிமென்ட் செய்திகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

இதனால் அஜித் ரசிகர்களையும் தாண்டி பொது மக்களையும் வெகுவாக கவர்ந்து இழுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து ஹுமா குரேஷி, யோகி பாபு, புகழ், கார்த்திகேயா மற்றும் பல நடிகர் நடிகைகள் நடித்து அசத்தி உள்ளனர். படம் வெளிவர இன்னும் கம்மியான நாட்களே இருக்கின்றன.

ஒருபக்கம் ப்ரீ பிசினஸ் வேட்டை வேற லெவல் அசத்திய நிலையில் தற்போது ப்ரீ புக்கிங் விற்பனையும் ஜோராக நடைபெற்று வருகிறது. இந்த வகையில் யுஎஸ்எல் மட்டுமே வலிமை திரைப்படத்தின் பிரீ பூக்கிங் மட்டும் வேற லெவல் மார்க்கட்டிங் உள்ளது.

இதுவரை 22. 5 வசூல் செய்ததாக தகவல்கள் வெளிவருகின்றன மற்ற இடங்களிலும் வலிமை படத்தின் பிரீஃபூக்கிங் வசூல் ஜோராக நடைபெற்று வருவதாக கூறுகிறது. அதனால் நிச்சயம் வலிமை திரைப்படம் வெளிவந்து மிகப்பெரிய ஒரு சாதனையை படைக்கும் என சினிமா பிரபலங்களின் கருத்தாக இருக்கிறது.