திருமணக்கோலத்தில் ரசிகர்களை திணறடிக்கும் வலிமை பட நடிகை..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ.!

huma-quroshi-4

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக பிரதிபலிப்பவர் தான் தல அஜித் இவர் சமீபத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளரான போனிகபூர் தயாரிப்பது மட்டுமில்லாமல் இத்திரைப்படத்தினை வினோத் அவர்கள் தான் இயக்கி வருகிறார்.

மேலும் இந்த திரைப்படத்தில் தல அஜித்திற்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஹுமா குரோஷி கதாநாயகியாக நடிக்க உள்ளார். இவ்வாறு பிரபலமான நமது நடிகை பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

ஆனால் இவர் இதற்கு முன்பாகவே தமிழ் திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார் அதாவது பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகிய காலா என்ற திரைப்படத்தில் தான்  நமது நடிகை ரஜினிக்கு ஜோடியாக நடித்தார் இவ்வாறு இந்த திரைப்படத்தின் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களையும் இவர் கவர்ந்து விட்டார்.

இதனைத்தொடர்ந்து  தற்போது நமது நடிகை தல அஜித்துடன் ஜோடி போட்டு நடிப்பதன் காரணமாக இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது மட்டுமில்லாமல் இன்று திரைப்பட படப்பிடிப்பு சுமார் இரண்டு வருடங்களாக நடைபெற்று வந்துள்ளது.

மேலும் இத்திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையரங்கில் வெளியிட உள்ளதாக படக்குழுவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.பொதுவாக பிரபல நடிகைகள் அனைவரும் சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருப்பது வழக்கம்தான்.

அந்த வகையில் நமது நடிகை சமீபத்தில் திருமணக்கோலத்தில் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.