தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களின் படங்களை ரசிகர்கள் பெரிய அளவில் எதிர் பார்ப்பது வழக்கம் அந்த வகையில் அஜித்தின் வலிமை திரைப்படத்தை ரசிகர்கள் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக எதிர்பார்த்த நிலையில் ஒரு வழியாக பல்வேறு தடைகளைத் தாண்டி அஜித்தின் வலிமை திரைப்படம் பிப்ரவரி 24 ஆம் தேதி உலக அளவில் ரிலீஸ் ஆனது.
மக்கள் மற்றும் ரசிகர்கள் எதிர் பார்த்தது போலவே வலிமை திரைப்படத்தில் ஆக்ஷன் சென்டிமென்ட் த்ரில்லர் என அனைத்தும் சிறப்பாக இருந்த காரணத்தினால் மக்கள் கூட்டம் இன்று அளவும் குறையாமல் வந்துகொண்டே இருக்கிறது இதனால் வசூல் ரீதியாக அடித்து நொறுக்குகிறது.
மேலும் சிறப்பான விமர்சனத்தையே மக்கள் கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வலிமை திரைப்படம் தமிழை தாண்டி மற்ற மொழிகளான கன்னடம் தெலுங்கு ஹிந்தி ஆகியவற்றில் வெளியாகி அங்கும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது இதனால் வலிமை திரைப்படம் இதுவரை மட்டுமே 150 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களான ரஜினி விஜய் ஆகியோரின் படங்களின் சாதனையை முறியடித்து வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் முதல் வாரத்தில் அதிக வசூலைப் பெற்று முதலிடத்தில் இருந்த பிகில் படத்தின் சாதனையையும் தற்பொழுது வலிமை திரைப்படம் முறியடித்துள்ளது.
பிகில் படம் முதல் வாரத்தில் மட்டுமே சுமார் 102 கோடி அள்ளி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன ஆனால் அஜித்தின் வலிமை திரைப்படமும் முதல் வாரத்தில் 120 கோடியை அள்ளிக் தற்பொழுது அதனை முறி அடித்து முதலிடத்தை பிடித்துள்ளது.இந்த படம் சிறப்பாக இருப்பதால் மக்கள் கூட்டம் திரையரங்கை நாடுவதால் இன்னும் பல்வேறு வசூல் சாதனையை இப்படம் பெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.