சினிமா உலகில் நடன கலைஞர், நடிகர் என பன்முக தன்மை கொண்டவராக விளங்கி வருபவர் பிரபுதேவா. தமிழை விட ஹிந்தி தெலுங்கு ஆகிய பலமொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது பிரபுதேவா பல படங்களில் நடித்து முடித்துள்ளார் அந்த படங்கள் திரைக்கு வர ரெடியாக இருக்கின்ற நிலையில் பல இயக்குனர்களும் அவரை சந்தித்து கதையை கூறி வருகின்றனர்.
அப்படி பிரபுதேவாவிடம் ஒரு இயக்குனர் ஒரு சிறப்பான கதையை கூறியுள்ளார் அந்த கதையை கேட்டு பிரபுதேவா அசந்து விட்டாராம் அந்த அளவிற்கு காட்சிகள் வசனங்கள் போன்ற அனைத்தும் பிரமாதமாக இருந்தது. ஆனால் இந்த கதை எனக்கு செட்டாகாது என அந்த இயக்குனரிடம் கூறிவிட்டாராம்.
மேலும் இந்த கதை காட்சிகள் போன்ற அனைத்தும் அஜித்துக்கு தான் பொருத்தமாக இருக்கும் அதனால் அவரிடம் சொல்லுங்கள் என கூறியுள்ளார் அந்த இயக்குனரோ உங்களிடம் நான் கதை கூறவே பல திண்டாட்டம் இதில் எப்படி நான் அஜித்திடம் போய் கதை கூற வாய்ப்பு கிடைக்கும் என கூறியுள்ளார்.
பின்பு பிரபுதேவா அந்த இயக்குனரிடமும் எந்த நேரத்தில் எது வேணுனாலும் நடக்கலாம் இந்த கதை யார் மூலமாகவாவது அஜித்திற்கு சென்று அஜித் கூட உங்களுக்கு போன் செய்யலாம் எனக்கூறி நம்பிக்கையோடு இருங்கள் என அனுப்பி வைத்துள்ளார் பிரபு தேவா.
நடிகர் அஜித் தற்போது அவரது 61வது திரைப் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் இந்த படம் முடிந்து அடுத்து 62வது திரைப் படத்தில் நடிக்கவும் இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் கமிட்டாகியுள்ளார். அதனால் இந்தப் படங்களுக்குப் பிறகு அஜித்திடம் இந்தக்கதை சென்று அந்த இயக்குனருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதைப் பார்ப்போம்.