அண்மை காலமாக காமெடியன், இயக்குனர், இசையமைப்பாளர் என பலரும் ஹீரோவாக கால்தடம் பதித்து வெற்றி கண்டு வருகின்றனர் அந்த வகையில் கோமாளி படத்தை இயக்கிய வெற்றி கண்ட பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே என்னும் படத்தை இயக்கி, நடித்தார். இந்த படம் கடந்த நான்காம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது.
இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்தது யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்தவர். லவ் டுடே படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் கைகோர்த்து சத்யராஜ், ராதிகா சரத்குமார், ரவினா ரவி, ஆஜித், யோகி பாபு, இவானா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர் இந்த படத்தின் முதல் பாதி லவ், காமெடி எனப் போக..
இரண்டாவது பாகம் பக்கா செண்டிமெண்டாக உருவாகியிருந்தது இந்த படம் இந்த காலகட்டத்திற்கு தேவையான ஒரு படமாக இருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பற்றிய தற்பொழுது சூப்பராக கூடிக் கொண்டிருக்கிறது. லவ் டுடே படம் ஹவுஸ் புல்லாக ஓடுவதன் காரணமாக வசூலும் எதிர்பார்த்ததை விட நன்றாகவே இருக்கிறது.
மூன்று நாளில் மட்டுமே 15 கோடி கிட்டத்தட்ட வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் பிரதீப் ரங்கநாதன் விஜயை சந்தித்து ஒரு கதையை சொல்லி உள்ளதாக தகவல்கள் வெளிவந்தன இது குறித்து அவரிடமே கேட்கப்பட்டது அதற்கு அவர் பதில் அளித்தது என்னவென்றால்..
தளபதி விஜயிடம் நான் கதை சொன்னது உண்மைதான் அது பற்றி இப்பொழுது விலாவாரியாக சொன்னால் நான் லவ் டுடே படத்தின் ப்ரொமோஷனுக்காக பேசுகிறேன் என பலரும் கூறிவிடுவார்கள் அதனால் இந்த படம் வெற்றி பெற்ற பிறகு விஜய் யாரிடம் கதை சொன்னது பற்றி விலாவாரியாக பேசுகிறேன் என கூறி இருக்கிறார்..