அட்லீ சொன்ன கதை சூப்பரா இருக்கு.. கேட்ட சம்பளம் தான் ரொம்ப அதிகம் – அதிர்ந்துப்போன டாப் ஹீரோ.?

atlee
atlee

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் அசிஸ்டெண்ட் ஆக பணியாற்றி தற்போது இயக்குனராக வெற்றிகண்டு வருபவர் அட்லீ. இவர் முதலில் ஆர்யா நயன்தாரா ஆகியவர்களை வைத்து ராஜா ராணி என்னும் ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர் அதனைத் தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல் என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து தன்னை மிகப்பெரிய அளவில் பிரபலப்படுத்தி கொண்டார்.

அடுத்ததாக தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்களை வைத்து படங்களை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென ஹிந்தி பக்கம்தான் ஆகிவிட்டார் பாலிவுட்டில் கிங்காக வலம் வரும் ஷாருக்கானுக்கு ஒரு புதிய கதையை சொல்லி தற்பொழுது கமிட்டாகியுள்ளார்.

இந்த படத்திற்கு லயன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது மற்றும் அதை சுற்றி இருக்கும் பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் அட்லீ தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுனுக்கு சூப்பரான கதையை சொல்ல வந்திருந்தாராம்.

அவர் சொன்ன கதை நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ரொம்ப பிடித்து போய் விரும்புவதாகவும் கூறி இருந்தார். ஆனால் அந்த படத்தை இயக்க இயக்குனர் அட்லீ  கேட்ட சம்பளம் தான் ரொம்ப அதிகம். ஒரு டாப் ஹீரோ வாங்கும் சம்பளமான 35 கோடியை அட்லீ  கேட்டுள்ளார்.

அதிர்ச்சியான நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குனர் அட்லீயை திருப்பி அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த சம்பவம் ஏற்கனவே நடந்த இருந்தாலும் தற்போது பேசப்பட்டு வருகிறது.