இயக்குனர் ஷங்கர் நடிகர் ராம்சரணுக்கு சொல்லி வச்சியிருக்கும் கதை.? நம்ப தளபதி விஜய்க்கு சொன்ன கதையாம்.? ஏன் நடிக்கல தெரியுமா.?

shankar
shankar

சினிமா உலகில் வெற்றியை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கும் இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குனர் ஷங்கர் இவர் இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட படங்கள் தான் அந்த தோல்வியை தழுவாமல் வெற்றி பெற்று வசூலை வாரி குவித்ததால் தொட முடியாத உச்சத்தில் இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், அர்ஜுன், விஜய் போன்ற டாப் நடிகர்களை வைத்து எடுத்த படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது அதனால் அந்த நடிகர்களுக்கும் நல்லதொரு படமாக அமைந்தது அது போல இயக்குனர் ஷங்கருக்கும் அங்கீகாரத்தை பெற உதவிகரமாக இருந்தது.

இந்த நிலையில் ஷங்கர் இந்தியன் 2 படத்தை கமலுடன் மீண்டும் சேர்ந்து நல்ல படத்தை கொடுக்க அதிகம் ஆர்வம் காட்டினார். ஆனால் யாரும் எதிர் பார்க்காத வகையில் சில பிரச்சனைகள் நடந்ததால் படத்தை அப்படியே நிறுத்திவிட கமலும், சங்கரும் வேறுவேறு பயணத்தைத் தொடர்ந்தனர் அதிலும் ஷங்கர் ஹிந்தி, தெலுங்கு படங்களில் அதிகம் ஆர்வம் கட்டினார்.

அந்த வகையில் ஹிந்தியில் ரன்பீர் கபூருடன் இணைந்து அந்நியன் படத்தை ரீமேக் இருந்தார். தெலுங்கில் ராம்சரணுக்கு ஒரு கதையை சொல்லி ஓகே செய்து இருந்தார். இந்த நிலையில் லைக்கா நிறுவனம் இந்தியன் 2 படத்தை எடுக்காமல் எந்த படமும் அவர் எடுக்க கூடாது என தடை போட  இதனால் ஷங்கர் தலைகால் புரியாமல் இருக்கிறார்.

இந்த நிலையில் ஷங்கர் பற்றிய செய்தி ஒன்று வைரலாகி வருகிறது. ஷங்கர் ஒரு படத்தை முடித்து விட்டு மற்றொரு படத்தை எடுக்க 2,3 வருடங்கள் எடுத்துக்கொள்வார். இப்படி இருக்க இந்தியன் 2 படமே முடிந்த பாடு இல்லை அதற்குள் எப்படி ராம் சரணுடன் திடீரென ஒரு கதையை சொல்லி எப்படிகமிட் செய்தார் என்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது .

இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 படத்திற்கு பிறகு விஜய்யை வைத்து ஒரு புதிய படத்தை எடுத்த அதிகம் ஆர்வம் காட்டினார் ஆனால் இவர்கள் இருவரும் இணைய முடியாமல் போனது. அந்த கதையே தற்போது ராம்சரணுக்கு சொல்லி இருக்கிறார். விஜய், ஷங்கரும் பல முறை இணைய இருந்தனர் அனால் நடக்க முடியாமல் போனது காரணம் தளபதி விஜய் ஒரு திரைப்படத்திற்காக 100 கோடி சம்பளம் வாங்குகிறார்.

மேலும் சங்கருக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்க வேண்டும் இதனால் இருவருக்கும் சுமார் 150 கோடி செலவாகும் அதன்பிறகு தான் படத்தின் பட்ஜெட் தொகையை ஒதுக்க முடியும் என்பதால் தயாரிப்பாளர்கள் பலரும் முன்வரவில்லை இப்படி இருக்கவே தான் அந்த படத்தின் கதையை ராம் சரணுக்கு சொல்லி ஓகே செய்து உள்ளாராம். ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.