தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் இருந்து காமெடியனாக நடித்து வருபவர் வடிவேலு. சினிமா உலகில் பல படங்களில் சிறப்பான காமெடி நடிப்பை வெளிப்படுத்தி ஓடிக்கொண்டிருந்த இவருக்கு ஒரு சில இயக்குனர்கள் கதை சொல்லி அவரை ஹீரோவாகவும் மாற்றினார் அதிலும் கால்தடம் பதித்து வெற்றி கண்டார்.
யார் கண்ணு பட்டதோ என்னமோ திடீரென அடுத்தடுத்த பிரச்சனைகளில் மாட்டி ஒருகட்டத்தில் இயக்குனர் ஷங்கருக்கும் வடிவேலுக்கு மிகப்பெரிய பிரச்சனை எழ தயாரிப்பாளர் சங்கம் வடிவேலு சினிமாவில் இனி நடிக்கக்கூடாது என நிபந்தனை போட்டது இதனை அடுத்து நான்கு வருடங்கள் தமிழ் சினிமாவில் சொல்லிக்கொள்ளும்படி வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வந்த நிலையில் தற்போது அந்த பிரச்சனையை சுமுகமாக பேசப்பட்டு அதிலிருந்து வெளியேறி உள்ளார்.
வடிவேலு வந்த அடுத்த கணமே அவரை அடுத்தடுத்த கதை சொல்லி அவரை புக் செய்து விட்டனர் தொடர்ந்து லைக்கா நிறுவனத்துடன் 5 திரைப்படங்களில் நடிக்கிறார். முதலாவதாக சுராஜ் உடன் இணைந்து நாய் சேகர் என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் ஆனால் நாய் சேகர் என்ற தலைப்பை வேறு ஒரு படம் கைப்பற்றி விட்டதால் தற்பொழுது படத்தின் தலைப்பை சிறிது மாற்றம் செய்து நாய் சேகர் ரிட்டன்ஸ் என வைத்துள்ளனர்.
சமீபத்தில் கூட இந்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது அதில் வடிவேலு மாஸாக அமர்ந்து இருப்பார். இப்படி இருக்கின்ற நிலையில் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் கதை இணையதளத்தில் கசிந்துள்ளது. போஸ்டர் மட்டும் டைட்டிலை பார்க்கும்போது தெரிகிறது படம் நாயை வைத்து தான் என்பது. அதாவது வடிவேலு பணக்காரர்கள் வீட்டில் இருக்கும் நாயை திடுக்கிடுவார்.
பின் அதே பணக்காரர்கள் நாய் வாங்குவதற்கு வடிவேலு விடம் செல்வார்கள் வடிவேலு ஒன்றும் தெரியாதது போல் பேரம் பேசி நாயை அவர்களிடமே விற்றுவிடுவார் இதுதான் படத்தின் கதை என தெரியவந்துள்ளது. இதில் சில காமெடிகளை புகுத்தி படம் வரும் என பலரும் கூறுகின்றனர் மேலும் ரசிகர்கள் நிச்சயம் இந்த படம் வடிவேலுக்கு ஒரு சூப்பர் ஹிட் படமாக அமையும் என கூறிவருகின்றனர்.