லீக்கானதா வலிமை திரைப்படத்தின் கதை..! கற்பனைக்கு முற்று புள்ளி வைத்த வினோத்..!

vinoth
vinoth

சுமார் இரண்டு வருடங்களாக படப்பிடிப்பில் இருந்து வரும் ஒரு திரைப்படம் என்றால் அது தல அஜித்தின் வலிமை திரைப்படம் தான் இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் மிகவும் பிரபலமானது மட்டுமில்லாமல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிவிட்டு உள்ளது.

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தினை போனிகபூர் அவர்கள் தயாரிப்பில் உருவாகும் திரைப்படமாக அமைந்தது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை இயக்குனர் வினோத் அவர்கள் தான் இயக்கி உள்ளார் மேலும் இந்த திரைப்படத்தில் தல அஜித்திற்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஹூமா குரோஷி  அவர்கள் நடித்து வருகிறார்

பொதுவாக பல திரைப்படங்களை காட்டிலும் தல அஜித்தின் வலிமை திரைப்படத்தின் ட்ரெய்லர் சுமார் 3 நிமிடங்கள்  வெளியிடபட்டது இதன் மூலமாக இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர் இதுதான் கதை என பதிவிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் இது குறித்து திரைப்படத்தின் இயக்குனர்  கூறியது என்னவென்றால் பொதுவாக சென்னை போன்ற பெருநகரங்களில் இருக்கும்  ரசிகர்கள் பல்வேறு விதமான திரைப்படங்களை பார்த்து இருப்பார்கள் அது மட்டுமில்லாமல் பல மொழி திரைப்படங்களையும் பார்த்து ரசிப்பார்கள்.

ஆனால் கிராமத்தில் இருக்கும்  ரசிகர்கள் ஒருவிதமான சினிமாவை மட்டுமே தேடுவார்கள் அந்த வகையில் இரு தரப்பினர் மனதிலும் ஒரு திரைப்படம் இடம் பிடித்து விட்டால் அந்தத் திரைப்படம் வெற்றியை பூர்த்தி செய்கிறது.

பொதுவாக நாங்கள் வலிமை ட்ரெய்லரில் கதையை நாங்கள் முழுமையாக சொல்லவில்லை மக்களுக்கு தேவையான அடிப்படை விஷயங்களை மட்டுமே ட்ரெய்லரில் உருவாக்கி வெளியிட்டு உள்ளோம். ஆகையால் படம் முழுக்க வித்தியாசமான கண்ணோட்டத்துடன் இருக்குமென  இயக்குனர் வினோத் கூறியுள்ளார்.