தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத சக்கரவர்த்தியாக வலம் வரும் விஜய் அடுத்தடுத்து சிறந்த இயக்குனர்களை தேர்வு செய்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். பீஸ்ட் திரைப்படத்தை முடித்த கையோடு அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி என்பவருடன் கைகோர்த்து பெரிய பட்ஜெட்டில் அவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதனால் விஜய் அடுத்தடுத்து தெலுங்கு பக்கம் உள்ள இயக்குனர்களுக்கு வாய்ப்புகளை கொடுப்பார் என ஒரு பக்கம் ரசிகர்கள் கூறி வந்த நிலையில் தற்போது அது இல்லை என நிராகரிக்கப்பட்டுள்ளது.
விஜய் தெலுங்கு பட இயக்குனருடன் கைக்கோர்பார் என எதிர்பார்க்க பட்ட நிலையில் தமிழ் சினிமாவில் தேசிய விருது பெற்ற இயக்குனரான வெற்றிமாறனுடன் விஜய் இணைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இருப்பினும் அதிகாரப்பூர்வமாக இல்லை என்பதால் வெற்றிமாறனை சமூக வலைதளப் பக்கத்தில் தளபதி ரசிகர்கள் நீங்கள் இணைவது உறுதிதானா என கேட்டுக் கொண்டு வந்த நிலையில் வெற்றிமாறனின் சமீபத்திய பேட்டி ஒன்றில் நான் விஜய்யை வைத்து படம் இயக்குவது உறுதி என அவர் கூறினார்.
ஆனால் விஜய்யும் வெற்றிமாறனும் இணையும் படம் எப்படிப்பட்ட படமாக இருக்கும் என்பது ரசிகர்களின் கேள்விக்குறியாக இருந்து வந்தது அந்த வகையில் வெற்றிமாறனின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் தொடர்புகொண்டு கேள்விகளை எழுப்பத் தொடங்கினர்.
அந்த வகையில் அதற்கான பதிலும் கிடைத்துள்ளது dead of shoes என்ற நாவலில் இருந்து இந்த படம் எடுக்கப்பட உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.