தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் தளபதி விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் முடிவடைய உள்ள நிலையில் வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி திரையரங்கிற்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
பீஸ்ட்டை தொடர்ந்து அடுத்த படமான விஜயின் 66-வது திரைப் படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஆம் பெயர் வைக்கப்படாத இந்த திரைப்படத்தினை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க உள்ளார். மேலும் இதனை தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்கிறார்.
இந்த படத்தின் இயக்குனர் விஜயிடம் கதை கூறியபோது விஜய் அசந்துபோய் விட்டாராம். மேலும் கடந்த இருபது வருடங்களில் இது போன்று ஒரு கதையை அவர் கேட்கவே இல்லையாம் அந்த அளவிற்கு மிக அருமையாக இருக்கிறது என விஜய் கூறியதாக தயாரிப்பாளர் தில் ராஜு சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
இந்த நிலையில் நடிகர் விஜய் கேட்டு அசந்து போன அந்த படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஆம் இப்படத்தில் விஜய் எரோட்டோமேனியா என்ற நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பாராம். இந்த நோயினால் பாதிக்கப்படுபவர்கள் தன்னை ஒருவர் காதலிப்பதாக நினைத்து கொண்டு தீவிர அன்பை அவர் மீது செலுத்தி வருவார்களாம்.
இப்படி வித்தியாசமாக விஜயிடம் வம்சி கதை கூறியது. விஜய்யை ஆச்சரியத்தில் உள்ளாக்கியது. என கோலிவுட் வட்டாரத்தில் பேசி வருகின்றனர். மேலும் விஜய் ரசிகர்களும் நிச்சயம் தளபதி 66 படம் மிகப்பெரிய ஒரு வெற்றியை ருசிக்கும் என அடித்து கூறுகின்றனர்.