அண்மை காலமாக பிரமாண்ட பட்ஜெட்டில் பல படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன அந்த வகையில் சரவணா ஸ்டோர் ஓனர் சரவணன் அருள் ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் தி லெஜெண்ட் இந்த படமும் 200 கோடி பொருள் செலவில் மிக பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது.
படம் தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் சரவணன் அருள் உடன் இணைந்து ஊர்வசி ரவுதேலா, பிரபு, நாசர், விவேக் என ஒரு மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. படம் விரைவில் வெளியாக உள்ளது.
அன்மையில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நேரு திரையரங்கில் நடந்த அரங்கேறியது. இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். தி லெஜண்ட் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய ஹாரிஸ் ஜெயராஜ் சொன்னது. முதலில் இந்த படத்தின் கதையை கேட்டவுடன் நான் பண்ணமாட்டேன் என இயக்குனருடன் கூறிவிட்டேன்.
6 மாதத்திற்கு பிறகு கதையில் சில மாற்றங்களை செய்து இயக்குனர் என்னிடம் வந்து சொன்னார் பிறகுதான் நான் ஒப்புக் கொண்டேன். லெஜண்ட் சரவணன் என்னுடைய நண்பர் நாங்கள் இருவரும் 12 வருடங்களாக நல்ல நண்பர்களாக இருந்து வருகிறோம்.அவர் ஹீரோவாக இந்த படத்தில் நடிக்கிறார் என்று சொன்ன உடனேயே நான் அதிர்ச்சி அடைந்தேன்.
அவர் இந்த படத்தில் நடித்தால் யார் பார்ப்பார் என்று கூட எனக்கு தோணுச்சு ஆனா இந்தப் படத்துல அவர் ரொம்ப கஷ்டப்பட்டு நடிச்சு இருக்காரு.. இந்த படத்திற்கு பலமே படக்குழு தான் என ஓபன்னாக பேசியுள்ளார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.