நடிகர் அஜித்குமார் ஒரு இயக்குனருடன் பணியாற்றினால் தொடர்ந்து அந்த இயக்குனருடன் இரண்டு மூன்று படங்களில் இணைவது வழக்கம் அந்த வகையில் ஹச் வினோத்துடன் கைகோர்த்து நேர்கொண்ட பார்வை வலிமை ஆகிய இரு படங்களை கொடுத்தார் தற்போது மூன்றாவது முறையாக இந்த கூட்டணியில் உருவாகும் படம் தான் துணிவு.
நேர்கொண்ட பார்வை வலிமை படத்தை தயாரித்த போனி கபூர் அஜித்துடன் மூன்றாவது முறையாக இணைந்து துணிவு படத்தை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மஞ்சு வாரியர், வீரா, சமுத்திரக்கனி, யோகி பாபு, ஜான் கொக்கன் போன்ற பலரும் நடித்துள்ளனர் படத்தின் படப்பிடிப்பு டப்பிங் பணி போன்ற அனைத்தும் முடிவடைந்து.
ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளதால் அஜித் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். சினிமா உலகில் அஜித்துக்கு போட்டி நடிகர் என்றால் விஜய் தான் அந்த வகையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு அஜித் மற்றும் விஜயின் படங்கள் திரையில் ஒன்றாக மோத இருக்கின்றன.
ஆம் பொங்கலுக்கு அஜித்தின் துணிவு வெளியாகுவது போல் விஜயின் வாரிசு படமும் வெளியாக உள்ளது. இதனால் சினிமா பிரபலங்கள் முதற்கொண்டு ரசிகர்கள் வரை பலரும் செம்ம எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். துணிவு படத்தின் முன்பதிவு வெளிநாடுகளில் ஜோராக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் UK வில் முன்பதிவு தளத்தில் துணிவு படத்தின் கதை குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
அதில் கூறுவது சென்னையில் பல இடங்களில் தொடர்ந்து வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது அஜித் தலைமையிலான டீம். அதற்கான திட்டங்கள் அனைத்தையும் அஜித் தான் போடுவார். எதற்காக இப்படி வங்கியில் அஜித் கொள்ளை அடிக்கிறார் என்பது தான் இந்த படத்தின் கதை..