நடிகர் தனுஷ் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் இவர் சைலண்டாக இருந்து கொண்டு எதிர்பார்க்காத சூப்பரான படங்களை கொடுத்து அசத்துவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் நடிகர் தனுஷ் கடைசியாக நடித்த திருச்சிற்றம்பலம் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பிரம்மாண்ட வெற்றியை ருசித்தது.
அதை தொடர்ந்து அடுத்ததாக இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் நானே வருவேன் இந்த படத்தை செல்வராகவன் இயக்கி உள்ளார். பிரபல தயாரிப்பாளர் கலைபுலி தாணு இந்த படத்தை பிரமாண்ட பொருட்செளவில் தயாரித்து இருக்கிறார். இந்த படத்தில் தனுஷ் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மேலும் இந்த படத்தில் இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு..
மற்றும் இயக்குனர் செல்வராகவனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் படம் வருகின்ற செப்டம்பர் 29ஆம் தேதி கோலாகலமாக வெளியாக இருக்கிறது. படம் வெளிவர இன்று ஒரு நாள் மட்டுமே இருப்பதால் படகுழு தொடர்ந்து பிரமோஷன் வேலைகளில் தீவிரம் காட்டி வழிகிறது. இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் தற்போது அதிகரித்து காணப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் செல்வராகவன்.
சமீபத்தில் தனியார் பேட்டி ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது என்னவென்றால் நானே வருவேன் படத்தின் திரை கதையை உருவாக்க ஆறு மாதங்கள் எடுத்துக் கொண்டதாகவும், இந்த ஸ்கிரிப்ட்டை திரையில் கொண்டு வருவதற்கு மிகவும் சவாலாக இருந்ததாகவும் கூறி உள்ளார்.
மேலும் பேசிய அவர் தனுஷின் கதை என்பதால் நாங்கள் இருவரும் பல நேரங்களில் பல விவாதங்களை மேற்கொண்டு அமைத்ததாகவும். குழந்தையிலிருந்து நடிகராகவும் தற்போது திரைக்கதை ஆசிரியராகவும் அவரின் பல வளர்ச்சி என்னை வியப்படைய வைத்ததாகவும் கூறி உள்ளார். இச்செய்தி இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு தற்பொழுது வைரலாகி வருகிறது