“லியோ” கதை லீக்.? சோகத்தின் பிடியில் லோகேஷ் கனகராஜ்

Leo
Leo

Leo : தமிழ் சினிமாவில் வெற்றி இயகுனராக வருவர் லோகேஷ் கனகராஜ் . இவர் எடுக்கும் படங்கள் ஒவ்வொன்றும் வெற்றி படங்களாக மாறி உள்ளது மாநகரம் படத்தை தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தன. அடுத்து இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க விஜயுடன் கூட்டணி அமைத்து “லியோ” படத்தை எடுத்துள்ளார்.

வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. வெளிவர இன்னும் சில தினங்கள் இருப்பதால் லியோ டீம் ரசிகர்களை குஷிப்படுத்த அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட்டு வருகிறது நேற்று கூட டிரைலர் குறித்து ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.

அதன்படி வருகின்ற அக்டோபர் 5 ஆம் தேதி லியோ டிரைலர் மிரட்ட இருக்கிறது என கூறியது.  இது ஒரு பக்கம் இருந்தாலும் லியோ படத்தின் இயக்குனர் லோகேஷுக்கும், நடிகர் விஜய்க்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக செய்திகள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.

இந்த நிலையில் லியோ படத்தின் கதை  இதுதான் என இணையதள பக்கங்களில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது. லியோ படத்தின் ஸ்னாப்சிஸ் என சொல்லப்படும் படத்தின் காட்சிகளை கொண்ட விவரங்கள்  திடீரென சமூக வலைத்தள பக்கங்களில் வெளியானது.

அதில் நடிகர்  விஜய், அர்ஜுன், சஞ்சய் தத் ஆகிய மூவரும் அண்ணன், தம்பிகள் விஜய் அவர்களிடமிருந்து விலகி காஷ்மீரில் ஒரு காபி ஷாப் வைக்கிறார். அங்கு மனைவி திரிஷாவுடன் வாழும் அவரை தேடி அர்ஜுன், சஞ்சய் தத் குரூப் தேடி வர மீதி என்ன நடக்கிறது என எல்லா விவரங்களும் அதில் இருந்துள்ளது இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.