தமிழ் சினிமா ஆரம்பத்தில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து ஓடிய சூரி ஒரு கட்டத்தில் காமெடியனாக வெற்றி கண்டார். சூரி அதன் பிறகு திரை உலகில் இருக்கும் அஜித் விஜய் சூர்யா சிவகார்த்திகேயன் போன்ற டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் இப்பொழுதும் பல பட வாய்ப்புகளை அள்ளி ஓடிக் கொண்டிருக்கிறார்.
அதில் ஒன்றாக வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை திரைப்படத்தில் சூரி ஒரு ஹீரோவாக நடித்து வருகிறார் இந்த படத்தை மக்கள் மற்றும் ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா உலகில் எவ்வளவு பெரிய உச்சத்தை தொட்டாலும் சிம்பிளாக இருப்பாதால் இவரை நிஜத்திலும் பலருக்கும் பிடிக்கிறது.
மேலும் இவர் மதுரையில் அம்மா பெயரில் பல உணவகங்களை திறந்து சிறப்பாக நடத்தி வருகிறார் இதன் மூலமும் இவருக்கு நல்ல காசு வருகிறது. ஆனால் அண்மையில் இவர் சரியாக வரி கட்டவில்லை எனக் கூறி இவரது ஹோட்டல் மற்றும் முக்கிய இடங்களில் ரைடு நடத்தப்பட்டது.
இந்த ரைடு சூரிக்கு மிகப்பெரிய கஷ்டத்தை கொடுத்ததாக தகவல்கள் வெளி வருகின்றனர் இந்த ரைடுக்கு தொடக்க புள்ளியாக இருந்ததே சிவகார்த்திகேயன் என சொல்லப்படுகிறது. சமீபத்திய திரைப்பட விழா ஒன்றில் சிவகார்த்திகேயன் சூரியை பற்றி பேசினார் அதில் அவர் சொன்னது என்னவென்றால்..
எப்பொழுது நடிகர் சூரிக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிகின்றன அதனால் இவரது காட்டில் தற்பொழுது பண மழை கொட்டுகிறது என கூறி இருந்தார். இதனால் உங்களை தேடி ரெய்டு வந்தாலும் ஆச்சரியதில் இல்லை என அவர் கூறி முடித்தார் அவர் சொன்ன சில நாட்களிலேயே அவரது ஹோட்டல் மற்றும் முக்கிய இடங்களில் ரைடு நடத்தப்பட்டது.