இயக்குனர் ராஜமௌலியின் அடுத்த படைப்பு இப்படித்தான் இருக்கும்..? வெளியே வந்த தகவல்.

rajamouli
rajamouli

அண்மைக்காலமாக பிரம்மாண்ட பட்ஜெட்டில் பல படங்கள் வெளிவருகின்றன அதற்கு அடித்தளம் போட்டவர்களில் ஒருவர் எஸ் எஸ் ராஜமௌலி இவர் பிரம்மாண்ட பட்ஜெட்டில் இதுவரை இயக்கிய திரைப்படங்கள் அனைத்துமே பிளாக்பஸ்டர் வெற்றி தான். இவர் இதுவரை பாகுபலி, பாகுபலி 2  போன்ற வெற்றி படங்களை கொடுத்ததை..

தொடர்ந்து இவர் கடைசியாக ராம்சரண், ஜூனியர் என்டிஆர் வைத்து உருவாக்கிய திரைப்படம் RRR இந்த படமும் ஆக்ஷன் சென்டிமென்ட் காதல் என அனைத்தும் கலந்த ஒரு படமாக இருந்ததால் இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று 1500 கோடி வசூல் செய்தது. தொடர்ந்து ராஜமௌலி இயக்கிய படங்கள் வெற்றியை குவிப்பதால்..

இவரது படத்தை பார்க்க ரசிகர்களை மக்களையும் தாண்டி சினிமா பிரபலங்கள் கூட்டம் அதிகமாகிறது. மேலும் இவரது படத்தை ஆசைப்படுகின்றனர். RRR திரைப்படத்தை தொடர்ந்து பிரமாண்ட இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி அடுத்ததாக உருவாக்க இருக்கும் திரைப்படம் என்னை என்பது குறித்து அண்மையில் பேசி உள்ளார்.

மேலும் அந்த படத்தின் ஹீரோ யார் என்பதும் அவர் தகவல் தெரிந்துள்ளது. அது குறித்து விலாவாரியாக தற்போது பார்ப்போம். பிரமாண்ட இயக்குனர் எஸ் எஸ் ராஜாமௌலி  அடுத்ததாக தெலுங்கு டாப் நடிகர் மகேஷ் பாபு உடன் கைகோர்த்து ஒரு புதிய படத்தை எடுக்கிறார் அந்த படத்திற்காக ஆப்பிரிக்க நாட்டிற்கு அவர் செல்ல இருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது..

இப்படி இருக்கின்ற நிலையில் “globetrotting ஆக்சன் அட்வெஞ்சர்” திரைப்படமாக உருவாக இருப்பதாக ராஜமௌலி கூறி உள்ளார். அப்படி என்றால் உலகம் முழுவதும் பரவலாக பயணம் செய்யும் ஒரு ஆக்சன் அட்வெஞ்சர் திரைப்படம் ஆக தான் இது உருவாகும் என பெரிய வருகிறது.