கதை சிறப்பாக இருந்தால் இயக்குனருக்கு புதிய பைக் வாங்கி கொடுத்த அஜித்.! வெளிவராத தகவல்.

AJITH
AJITH

தமிழ் சினிமாவில் காதல் மன்னனாக ஓடிக்கொண்டிருந்த அஜித் ஒரு கட்டத்தில் ஆக்ஷன் படங்களிலும், சமூக அக்கறை உள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து அசத்தினார் இது மக்களுக்கு ரொம்ப பிடித்துப் போனது அதுமட்டுமல்லாமல் அஜித்திற்கு அதிகப்படியான ரசிகர்களைக் உருவாக்கி கொடுத்தது.

இந்த நிலையில் தான் இளம் இயக்குனராக அப்பொழுது இருந்த சரவண சுப்பையா முதலில் அஜித்தை வைத்து சிட்டிசன் எனும் படத்தை கொடுத்திருந்தார் இந்த படம் அப்பொழுது வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது மேலும் அஜித் கேரியரில் மிக முக்கியமான படமாக இந்த படம் பார்க்கப் பட்டது இந்த படத்தில் அஜீத் பலவித கேரக்டர்களில் நடித்து மிரட்டியிருப்பார்.

இந்தப்படம் இப்பொழுதும் ரசிகர்களுக்கு பிடித்த படமாக அமைந்து உள்ளது அந்த அளவிற்கு நேர்த்தியாக சரவண சுப்பையா எடுத்திருப்பார் இந்த படத்தின் கதையை முதலில் அஜித்துக்கு சொல்ல அவரது வீட்டிற்கு சென்றுள்ளார் அப்பொழுது பைக்கில் சென்று இருந்தாராம் மேலும் ஒரு ப்ளூ கலர் சட்டையும் போட்டு இருந்தார்.

ப்ளூ கலர் சட்டையில் அடிக்கடி இயக்குனர் சரவண சுப்பையாவை பார்த்த அஜித் இந்த ட்ரெஸ்ஸில் பார்த்து உள்ளேன் என கேட்க இது எனக்கு ராசியான ட்ரஸ் என கூறியுள்ளார். பின் படத்தின் கதையை அவர் முழுவதும் கூற அது அஜித்துக்கு ரொம்ப பிடித்து போய் விடுவிட்டதாம். மேலும் அவரை பாராட்டினாராம் மதிய உணவு சாப்பிட்டு செல்லுங்கள் எனக் கூற இதோ வந்து விடுகிறேன் சொல்லி ஒரு மணி நேரம் கழித்துதான் சரவண சுப்பையா அஜித் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்பொழுது வந்து பார்த்த போது சரவண சுப்பையா இன்ப அதிர்ச்சியில் இருந்தாராம் அஜித் ஒரு புதிய பைக் ஒன்றை வாங்கி கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அவருக்கு ப்ளூ கலர் ஹெல்மெட்டை வாங்கி கொடுத்தாராம். இனி நீங்கள் ஒரு இயக்குனராக விஸ்வரூபம் எடுத்து உள்ளீர்கள் அதுவும் எனது இயக்குனர் நீங்கள் இந்த புது பைக்கில் தான் வரவேண்டும் என அஜித் கேட்டுக்கொண்டாராம்.