சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் தற்போது தீபாவளிக்கு வெளிவர இருக்கின்ற திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படமும் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் மையமாக வைத்து உருவாகி உள்ளதால் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. சிறுத்தை சிவா கிராமத்து கதையுள்ள படங்களை எடுப்பதில் கைதேர்ந்தவர் அந்த வகையில் அஜித்தை வைத்து ஏற்கனவே வீரம், வேதாளம் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
போதாத குறைக்கு படத்தில் ரஜினியுடன் கைகோர்த்து மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா போன்ற மிகப்பெரிய ஒரு பட்டாளமே நடித்து உள்ளதால் அந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்தப் படம் வெளிவருவதற்கு முன்பாக அண்மையில் போட்டுக் காண்பிக்கப்பட்டது. படத்தைப் பார்த்த பிரபலங்கள் பலரும் கொண்டாடிய நிலையில் இன்னும் வெகு சில நாட்களிலேயே வெளியாக உள்ளதால் அந்தப்படம் புக் செய்யப்படுகிறது.
ரஜினியின் படங்கள் பெரும்பாலும் ஆரம்ப நாட்களில் ஆயிரம் ரூபாய் டிக்கெட் விலை இருப்பது வழக்கம் ஆனால் தற்போது அண்ணாத்த திரைப்படத்திற்கு மட்டும் பல ஆயிரங்கள் ஒரு டிக்கெட்க்கு கொடுக்க வேண்டும் என்ற செய்தி தற்போது வெளியாகி உள்ளதால் பலரும் சமூக கோபத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில் பிரபல இயக்குனர் ஒருவர் அண்ணாத்த படம் பற்றிய பதிவு ஒன்றில் தனது கருத்தை போட்டுள்ளார் அதில் அவர் கூறிய செய்திகளால் ரசிகர்களிடம் இருந்து வசவு வார்த்தைகளை வாங்கி கட்டிக் உண்டி வருகிறார் .
அவர் பெயர் மு களஞ்சியம் இவர் ஒரு இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப்படத்தின் முன்பதிவு டிக்கெட் தற்போது விற்கப்படுகின்றன அண்ணாத்தா படத்தின் டிக்கெட் புக் இப்போது செய்யப்பட்டது. இந்த நிலையில் எத்தனை மணிக்கு ஷோ என்பது குறித்து. புக் செய்த டிக்கெட்டை புகைப்படத்தை பகிர்ந்து சில வார்த்தைகளை அவர் குறிப்பிட்டு உள்ளார். அதில் அவர் கூற வருவது டிக்கெட் விலை முதல் நாள் மட்டும் 2975 ரூபாய் இது பகல் கொள்ளை இல்லையா முதல்வரின் மகன் இப்படி செய்யலாமா. இதை அரசு அனுமதிக்கலாமா தயாரிப்பாளர் சங்கம் செய்வது நியாமா இந்த கொரோனா காலகட்டத்தில் சிஸ்டம் கெட்டுப் போச்சு என பலர் கூறுகின்றனர்.
அதுபோல இதுவும் தவறுதான் என களஞ்சியம் கூறியுள்ளார். அண்ணாத்த படத்தின் ஒரு டிக்கெட் விலை 2925 ரூபாய் என்பது தான் அவர் நினைத்து பேசியுள்ளார். ஆனால் அது உண்மையில் 15 டிக்கெட்டின் மொத்த விலை தான் 2925 ரூபாய். இதை கண்ட ரசிகர்கள் ஒரு டிக்கெட்டின் விலையே உங்களுக்கு தெரியல.. நீங்கள் எல்லாம் கருத்து சொல்ல வந்து விட்டீர்கள் என கூறி அவரை விமர்சிக்க தொடங்கி உள்ளனர்.