பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியல் மூலமாக தன்னுடைய நடிப்பு திறனை காட்டி ரசிகர்களை கவர்ந்து வருபவர்தான் நட்சத்திரா.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை சீரியலில் நடிப்பது மட்டும் இல்லாமல் தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் அந்த வகையில் இவர் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியது மட்டுமில்லாமல் சன் மற்றும் விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நமது சீரியல் நடிகைக்கு ராகவ் என்பவருடன் சில மாதங்களுக்கு முன்பாக திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது அந்தவகையில் இவர்களுடைய நிச்சய புகைப்படங்கள் சில சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வந்தன.
இவ்வாறு தன்னுடைய வருங்கால கணவரை நக்ஷத்திரா சுமார் 4 வருடங்களாக காதலித்து வந்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாத உண்மை. இந்நிலையில் இருவரின் வீட்டு சம்மதத்திற்காக வெகுநாளாக காத்திருந்த இவர்கள் தற்போது டிசம்பர் 9ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள்.
அந்த வகையில் தற்போது வருங்கால கணவருடன் நக்ஷத்திரா சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டுள்ளார் இவ்வாறு அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் இவர்கள் இருவரும் ஒரே நிற உடை அணிந்து கொண்டு இருப்பது மட்டுமில்லாமல் முத்தம் கொடுக்கும் படியான புகைப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திருமணத்திற்கு முன்பே ஒத்திகையா என ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகிறார்கள்.