டிக்கெட் வாங்கிய மூன்று பெண்களை பத்து தல படம் பார்க்க அனுமதிக்காத ஊழியர்கள்.! ரோகினி தியேட்டரில் பிரச்சனை செய்த ரசிகர்கள்..

pathu-thala
pathu-thala

சென்னை ரோகினி திரையரங்குகளில் டிக்கெட் எடுத்த மூன்று பேரை படம் பார்க்க அனுமதிக்காமல் ஊழியர்கள் தடுத்து நிறுத்திய நிலையில் அந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அதாவது இன்று சிம்பு நடித்துள்ள பத்து தல திரைப்படம் என்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் முதல் காட்சி இன்று காலை 8 மணி அளவில் திரையிடப்பட்டது.

எனவே படத்தை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் அதிகாலையிலேயே தியேட்டர் முன் குவிந்தனர் மேலும் சிம்புவிற்கு கட்டவுட் வைத்தும், பாலபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும், மேளம் தாளம் என ஆராவாரம் செய்துக் கொண்டாடினர். இதனை அடுத்து இன்று காலை 8 மணிக்கு பத்து தல திரைப்படம் திரையிடப்பட்ட நிலையில் இதனை பார்க்க ஏராளமான பெண்களும் வந்திருந்தனர்.

அந்த வகையில் சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் பத்து தல படத்தினை பார்ப்பதற்காக மூன்று நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் டிக்கெட் எடுத்த நிலையில் அனுமதிக்க மறுபக்கம் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இரண்டு பெண்கள் மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் காசு கொடுத்து டிக்கெட் வாங்கி இருக்கும் நிலையில் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை எனவே சிம்பு ரசிகர்கள் சிலர் ஊழியர்களிடம் சண்டை போட்ட நிலையில் அது குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது சென்னை போன்ற நகர்ப்புறங்களில் இப்படி ஒரு தீண்டாமை சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ரசிகர்களும் இந்த வீடியோவை பார்த்துவிட்டு திட்டி தீர்த்து வரும் நிலையில் ஆசைப்பட்டவர்களுக்கு இப்படி ஒரு படம் கூட பார்க்க முடியாமல் கொடுமைப்படுத்தி இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குரல் எழுப்பி உள்ளனர். பிறகு நேரில் பார்த்தவர்கள் அந்த பெண்ணை திரையரங்குக்குள் அனுமதிக்க வேண்டும் என ஊழியர்களிடம் கேள்வி கேட்க தொடங்கிய நிலையில் அதன் பிறகு அந்த பெண்ணையும் அவருடன் வந்திருப்பவர்களையும் படம் பார்க்க அனுமதித்தனர்.