புது வீடு கட்டியதால் தனுஷ் ரஜினிக்கு இடையே ஏற்பட்ட பிரிவு.! உண்மையை உடைத்த பிரபலம்..

rajini-dhanush
rajini-dhanush

நடிகர் தனுஷ் போயஸ் கார்டனில் ரூபாய் 150 கோடி செலவில் மிகவும் பிரம்மாண்டமான வீடு கட்டி உள்ள நிலையில் இதனால் தனுஷ் மற்றும் ரஜினிகாந்திற்க்கு கிடையே சின்ன மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வரும் தனுஷ் தற்பொழுது தெலுங்கில் சார் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதனை அடுத்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழில் வெளிவந்த வாத்தி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து சம்யுக்தா, சமுத்திரக்கனி, கென் கருணாஸ் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படம் கடந்த மாதம் ரிலீஸ்சாகி தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் ரஜினியின் மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினர்களுக்கு தற்பொழுது இரண்டு மகன்களும் இருக்கும் நிலையில் கடந்த வருடம் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இது கோலிவுட் வட்டாரத்தில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் விவாகரத்திற்கு பிறகு நடிகர் தனுஷ் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து புகழின் உச்சத்தில் இருந்து வருகிறார். இவரை அடுத்து ஐஸ்வர்யா ரஜினியும் தற்போது லால் சலாம் என்ற திரைப்படத்தினை இயக்க இருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் தனுஷ் ரூபாய் 150 கோடி செலவில் மிகவும் பிரம்மாண்டமான புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளார்.

அது குறித்த புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலான நிலையில் இந்த வீடு கட்டியதனால் ரஜினி-தனுஷ் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த சேயர் பாலு நடிகர் ரஜினிகாந்த் பொதுவாக வாஸ்துகள் மற்றும் ஜோசியத்தின் மீது அதிக நம்பிக்கையுடையவர்.

எனவே தனுஷிடம் இந்த வீட்டை கட்ட வேண்டாம் எனக் கூறியதாகவும் ஆனால் தனுஷ் இருப்பதிலேயே தன்னுடைய வீடு தான் அந்த இடத்தில் பெரிதாக இருக்க வேண்டும் என ரஜினியின் பேச்சை கேட்காமல் கட்டியதாகவும் இதன் காரணத்தினால் ரஜினி குடும்பம் தனுஷின் மீது வருத்தத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.