படமாடா இது.. செல்வராகவனின் படத்தை மோசமாக விமர்சித்து, காரி துப்பிய பிரபல நடிகரின் மகன்கள்

selvaragavan
selvaragavan

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபலம் என்றால் அது செல்வராகவன் தான் முதலில் இயக்குனராக தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார் மேலும் பல இளம் தலைமுறை நடிகர்களை வளர்த்து விட்டவர்களிலும் இவரும் ஒருவர் குறிப்பாக தனது தம்பி நடிகர் தனுஷை செல்வராகவன் தான் அறிமுகப்படுத்தி வளர்த்து விட்டதும் கூட.

கடைசியாக கூட தனுஷை வைத்து நானே வருவேன் எனும் படத்தை எடுத்து வெற்றி கண்டார். அதன் பிறகு செல்வராகவன் படங்களை இயக்குவதில் அதிகம் கவனம் செலுத்தாமல் நடிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டினார். அதுபோல அவருக்கு வாய்ப்புகளும் குவிந்த வண்ணமே இருக்கிறது.

சாணி காயிதம், பீஸ்ட் படத்தை தொடர்ந்து மோகன்ஜி இயக்கத்தில் உருவான பாகசூரன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் படம் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் வெளிவந்து நல்ல விமர்சனத்தை பெற்றாலும் எதிர்பார்த்த வசூல் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் படக்குழு நம்பிக்கையுடன் இருக்கிறது வருகின்ற நாட்களில் மாற்றங்கள் ஏதேனும் நடக்கும் என்று இப்படி இருக்கின்ற நிலையில் செல்வராகவன் சமீபத்திய பேட்டி ஒன்றில் சில விஷயங்களை ஓப்பனாக பேசி உள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. தொகுப்பாளர் செல்வராகவனிடம் உங்களின் படத்தை தனுஷின் மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா விமர்சனம் செய்வது உண்டா என கேள்வி எழுப்பினர் அதற்கு அவர் பதில் அளித்தது..

இரண்டு பேரும் உண்மையான விமர்சனர்கள் படம் பிடிக்கவில்லை என்றால் மோசமாக விமர்சிப்பார்கள், வெளிப்படையாகவே சொல்லிவிடுவார்கள் சில சமயங்களில் என் படத்தையே பார்த்துவிட்டு காரி துப்புவார்கள் என செல்வராகவன் கூறியிருக்கிறார். இந்த தகவல் தற்பொழுது இணையதள பக்கங்களில் காட்டு தீ போல பரவி வருகிறது