iswaran video song: சிம்பு தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்திற்கான சூட்டிங் பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வந்தது.
சிம்பு இந்த திரைப்படத்திற்கு முன்பு சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் முப்பதே நாட்களில் சுசீந்திரனுக்கு முடித்துக் கொடுத்தார்.
மேலும் அந்த படத்தில் நடிக்கும்போது சிம்புவுக்கு பல பிரச்சனைகள் அடுத்அடுத்து வந்து கொண்டிருந்தது அதையெல்லாம் கண்டுக்காத சிம்பு அந்த படத்தை முழுமையாக சுசீந்திரனுக்கு முடித்துக் கொடுத்துவிட்டார்.
அந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போன்றவற்றையெல்லாம் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வந்தது இதனை அடுத்து தற்பொழுது அந்த திரைப்படத்திலிருந்து தமிழன் என்ற பாட்டு சமூக வலைதள பக்கங்களில் வெளியாகியுள்ளது.
இந்தப் பாட்டை சிம்புவின் ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் வைரலாக்குவது மட்டுமல்லாமல் இந்த பாட்டுக்காக சமூக வலைதள பக்கங்களில் லைக், ஷேர் என அனைத்தும் பகிர்ந்து வருகிறார்கள்.