ஓவியா காலில் சுற்றி கொண்ட பாம்பு..! லீக்கான புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

oviya-2

தமிழ் சினிமாவில் நடிகர் விமல் நடிப்பில் வெளியான களவாணி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஓவியா இவ்வாறு பிரபலமான நமது நடிகை தான் நடித்த முதல் திரைப்படத்திலேயே மாபெரும் ரசிகர் கூட்டத்தை திரட்டி அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தையும் பிடித்து விட்டார்.

தன்னுடைய அழகான சிரிப்பிலும் காந்த பார்வையாலும் ஏகப்பட்ட ரசிகர்களை இழுத்துப் போட்ட நடிகை ஓவியா சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் களவாணி இரண்டாம் பாகம்  இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படமானது ஓரளவுக்கு வெற்றியை பெற்று வசூல் செய்தது.

இந்த திரைப்படத்திற்கு பிறகு நடிகை ஓவியா எந்தவொரு திரைப்படத்திலும் நடிப்பதற்கான வாய்ப்புகளும் கிடைக்கவில்லை அவரும் இதற்காக எந்த ஒரு முயற்சியும் எடுத்தது போல் கிடையாது. இந்நிலையில் அவர் நடித்துக்கொண்டிருக்கும் ராஜபீமா என்னும் திரைப்படத்தை மட்டுமே ஓவியா முழுமையாக நம்பிக் கொண்டிருக்கிறார்.

இவ்வாறு இந்த திரைப்படத்தில் இவர் வெற்றி கண்டுவிட்டால் இவருக்கு வாய்ப்புகள் கண்டிப்பாக வரும் என்பது நிச்சயம் தான் ஆனால் அதுவே தோல்வி அடைந்துவிட்டால் பட வாய்ப்பு முற்றிலுமாக குறைவதற்கு அதிக அளவு வாய்ப்பு இருக்கிறது அந்த வகையில் நடிகைகள் உடனே கையிலெடுப்பது போட்டோ ஷூட் தான்.

இவ்வாறு போட்டோஷூட் மூலமாக தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்வது மட்டுமில்லாமல் இயக்குனர்களிடம் வாய்ப்புகளையும் பெற்றுவிடுகிறார்கள் அந்த வகையில் நடிகை ஓவியா சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தில் தன்னுடைய காலில் பாம்பு இருப்பதுபோல் டாட்டூ குத்தியுள்ளார்.

இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது

oviya-2
oviya-2