தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நட்சத்திரம் அஜித்குமார் இவர் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான “துணிவு” திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக 260 கோடிக்கு மேல் அள்ளி படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இதை தொடர்ந்து பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா உடன் கைகோர்த்து ஏகே 62..
திரைப்படத்தில் நடிகர் அஜித் நடிக்க உள்ளார் என சில மாதங்களுக்கு முன்பே சொல்லப்பட்டது. ஆனால் இளம் இயக்குனர் விக்னேஷ் சிவன் சொன்ன கதை பிடிக்காமல் போனதால் அவரை நீக்கி விட்டு இளம் இயக்குனர் மகிழ் திருமேனியை ஏகே 62 திரைப்படத்திற்கு இயக்குனராக போட்டுள்ளது.
அண்மையில் நடிகர் அஜித்தை சந்தித்த இயக்குனர் மகிழ் திருமேனி ஒரு கதையை சொல்ல சொன்னால் இரண்டு கதை சொல்லி இருக்கிறாராம் அந்த இரண்டுமே அஜித்திற்கு பிடித்துள்ளதால் இயக்குனர் மகிழ் திருமேனி அடுத்தடுத்த படம் பண்ண இருக்கிறார்களாம். முதலில் சொன்ன ஆக்சன் கலந்த செண்டிமெண்ட் படம் தான் உருவாக இருக்கிறதாம்.
இந்த படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க அருண் விஜய் அல்லது அருள் நிதியிடம் மகிழ்த்திருமேனி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. அருண் விஜய் ஏற்கனவே நடிகர் அஜித்துடன் இணைந்து என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்துள்ளார் மேலும் மகிழ்திருமேனியுடன், அருண் விஜய் இணைந்து இரண்டு மூன்று படங்கள் பண்ணி உள்ளதால்..
AK 62 திரைப்படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் அருண் விஜய்க்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு விரைவிலேயே வரும் என சொல்லப்படுகிறது. அப்படி நடக்கும் பட்சத்தில் AK 62 படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கும் என சொல்லப்படுகிறது.