நடிகர் கமலஹாசன் தமிழ் சினிமாவில் உலக நாயகனாக வலம் வருகிறார் இவர் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் டிவி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வந்தார் தற்போது அந்த நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் விக்ரம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இன்று கோடி கோடியாக சம்பாதிக்கும் கமலஹாசன் மகள்கள் திரைப்படங்களில் லட்சக்கணக்கில் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் கமலஹாசனின் முன்னாள் மனைவியும் ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் தாயாருமான சரிகா ஒரு நாளைக்கு 2000 ரூபாய் பணத்திற்காக நடித்துக் கொண்டிருப்பதாக கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் கமலஹாசன் நடிகை சரிகாவை காதலித்து 1998 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதிகளுக்கு சுருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் என இரண்டு மகன்கள் பிறந்தார்கள் இந்த நிலையில் 2004 ஆம் ஆண்டு கமலஹாசனை சரிகா விவாகரத்து செய்துவிட்டார் அதன்பிறகு ஒரு சில பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வந்தார் சரிக்கா.
அதுமட்டுமில்லாமல் வெப் தொடரிலும் நடித்துவரும் சரிகா கொரோனா நேரத்தில் பணத்திற்காக மிகவும் சிரமப்பட்டதாகவும் கூறியுள்ளார் அது மட்டும் இல்லாமல் வெறும் 2000 ரூபாய் சம்பளத்தில் நாடகத்தில் நடிப்பதாகவும் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கமலஹாசன் மகள் சுருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் இருவரும் சினிமாவில் லட்சக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவரது அம்மாவை வரும் 2000 ரூபாய்க்கு நடிக்க விட்டு விட்டார்களே என ஆதங்கப்பட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.
மேலும் ஒரு சில ரசிகர்கள் ஆயிரம் தான் இருந்தாலும் சுருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் அவர்களைப் பார்த்து உங்கள் தாயார் இப்படி கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார் நீங்கள் மிகவும் ஜாலியாக இருக்கிறீர்களா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.