நடிகர் அஜித் குமார் தனது 61 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை இளம் இயக்குனர் வினோத் இயக்கி வருகிறார் இவர் இதற்கு முன்பாக அஜித்தை வைத்து வலிமை என்னும் ஆக்சன் திரைப்படத்தை எடுத்து அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது இந்தப் படமும் முழுக்க முழுக்க ஒரு பேங்க் ராபரி சம்பந்தப்பட்ட ஒரு படமாக உருவாகி வருகிறதாம்.
வலிமை படத்தை தொடர்ந்து இந்த படத்தை மிக பிரம்மாண்ட பொருட்செலவில் போனி கபூர் தயாரிக்கிறார். கே 61 படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். அஜித் இந்த படத்தின் கதைக்கு ஏற்றவாறு உடல் எடையை அதிரடியாக குறைத்து இந்த படத்தில் நடித்து வருகிறார். படத்தின் பூஜை போட்ட உடனேயே இந்த படத்தின் ஷூட்டிங்கும் ஆரம்பித்து விட்டது இதுவரை இரண்டு மாதம் ஐதராபாத்தில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து சமுத்திரகனி, மலையாள நடிகை மஞ்சுவாரியர், இளம் நடிகர் வீரா என ஒரு மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. படத்தின் ஷூட்டிங் போய்க் கொண்டிருந்தாலும் அவ்வப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வீடியோ மற்றும் புகைப்படங்கள் லீக்காகி கொண்டு தான் இருக்கின்றன.
இப்படி இருக்கின்ற நிலையில் தனக்கு கிடைத்துள்ள தகவலின்படி பார்க்கையில் அஜித்தின் AK 61 படத்தின் சூட்டிங் இதுவரை 51 நாட்கள் இரவு / பகல் பார்க்காமல் நடந்த வந்துள்ளதாகவும் இதுவரை கிட்டத்தட்ட 90% ஷூட்டிங் முடிந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஐதராபாத்தில் சென்னை மவுண்ட் ரோடு போன்று ஒரு செட் அமைக்கப்பட்டு பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டு முடிந்தது.
இதனை தொடர்ந்து படக்குழு அடுத்ததாக புனே சென்று அங்கு சில காட்சிகளை எடுக்க இருப்பதாகவும் அதனை முடித்துவிட்டு இறுதிகட்ட சூட்டிங் சென்னையில் நடத்தப்பட்ட இருப்பதாகவும் கூறப்படுகிறது இதுவரை 90% சூட்டிங் முடிக்கப்பட்டு உள்ளதாகவும் மீதி ஷூட்டிங் விரைவிலேயே எடுக்கப்பட்டு சொன்னது போல தீபாவளி அன்று படத்தை ரிலீஸ் செய்ய ரெடியாகிவிடும் என கூறப்படுகிறது.