தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக ஓடிக்கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் கடைசியாக நடித்த பீஸ்ட், வாரிசு போன்ற படங்கள் 200 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியது இதை தொடர்ந்து இளம் இயக்குனர் லோகேஷ் உடன் கூட்டணி அமைத்து லியோ திரைப்படத்தில் விஜய் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.
இந்த படமும் மிகப்பெரிய ஒரு ஆக்சன் பேக் திரைப்படமாக உருவாகி வருகிறது. லியோ திரைப்படத்தில் விஜய் உடன் இணைந்து மன்சூர் அலிகான், மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத், அர்ஜுன், திரிஷா, பிக் பாஸ் ஜனனி, ப்ரியா ஆனந்த் மற்றும் பல முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர்.
லியோ படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் சென்னையில் வெற்றிகரமாக முடிந்த நிலையில் அடுத்து தனி விமானத்தின் மூலம் லியோ படக்குழு காஷ்மீர் சென்றது அங்கு கடும் குளிர் என்று கூட பார்க்காமல் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதுவரையில் லோகேஷ் தனது ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து எந்த ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டது கிடையாது.
ஆனால் லியோ திரைப்படத்தின் சூட்டிங் ஸ்பாட்டிலிருந்து புகைப்படங்கள் வெளிவந்த வண்ணமே இருக்கிறது இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் உச்சத்தில் இருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் லியோ திரைப்படம் குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளன. அது குறித்து பார்ப்போம்..
காஷ்மீரில் தற்பொழுது லியோ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது மார்ச் 30 நிறைவு பெறும் அடுத்த கட்ட ஷூட்டிங் சென்னையில் நடக்கும் என தெரிய வருகிறது இறுதி கட்ட ஷூட்டிங் மே மாதத்தில் நிறைவடையும் சினிமா வட்டாரங்கள் மத்தியில் ஒரு செய்தி உலாவுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை..