பலரை சிரிக்க வைத்த விவேக்கின் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா அவரே கூறிய அதிர்ச்சியான தகவல்கள்.!

vivek
vivek

நிறைய திரைப்படங்களில் சமூக அக்கறை கொண்ட கருத்துக்களைக் கூறி ரசிகர்களிடையே சின்ன கலைவாணர் என்ற பட்டத்தை வென்றவர் தான் நடிகர் விவேக் இவர் நேற்று அதிகாலையில் மாரடைப்பு காரணமாக இந்த மண்ணை விட்டு மறைந்து விட்டார்.

மேலும் நேற்று இவருடன் பழகிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தங்களது வருத்தத்தை எப்படி தெரிவிப்பது என்று தெரியாமல் சமூக வலைதளப் பக்கங்களில் அவருடன் இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்தனர்.

அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் யோகி பாபு,சூர்யா,விக்ரம் போன்ற பல சினிமா பிரபலங்கள் அஞ்சலி செலுத்த வந்தார்கள் அது மட்டுமல்லாமல் அவரது நெருங்கிய நண்பரான வடிவேலும் தனது சமூக வலைதளங்களின் மூலம் விவேக்கை பற்றி பல விஷயங்களில் கூறியிருந்தார்.

இந்நிலையில் விவேக் ஒரு பேட்டியில் தனது மனம் உருகி பேட்டி கொடுத்துள்ளார் அதில் சிரிக்க வைப்பவனுக்கு இவ்வளவு கஷ்டங்கள் வரக் கூடாது எனவும் நான் என்ன தப்பு பண்ணேன் எனக்கு அத்தனை கஷ்டங்களும் வந்தது.

எனது அப்பா பொயிட்டாங்க எனது அம்மா பொயிட்டாங்க எனது மகனும் பொயிட்டான் எல்லாத்துக்கும் மேலான குருவா நினைக்கிற களாம் ஐயாவும் பொய்ட்டாங்க என மனம் உருகிய அந்த பேட்டியில் பேசியுள்ளார் விவேக்மேலும் அவர் பேசும் போது எடுத்த வீடியோ காணொளி ஆனது தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.