Kayal serial : சின்னத்திரை தொலைகாட்சியில் சீரியல்கள், காமெடி ஷோக்கள், சமையல் நிகழ்ச்சி போன்ற பல ப்ரோக்ராம்கள் நடத்தி வருகின்றன. இதில் வாரத்தில் முதல் ஆறு நாட்கள் ஆன திங்கள் முதல் சனி வரை தினம் தோறும் காலை ஆரம்பித்து இரவு வரை பல சீரியல்களை கொடுத்து வருகின்றன..
வாரத்தின் இறுதி நாளான ஞாயிறு தினத்தில் மக்களுக்காக என்டர்டைன்மென்ட் பல நிகழ்ச்சிகளையும் கொடுத்து வருகின்றனர் இந்நிலையில் சீரியலுக்கு பெயர் போன சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு சில சீரியல்கள் ரசிகர்களுக்கு ஃபேவரட் ஆக இருந்து வருகின்றன. அதில் ஒன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்..
கயல் மற்றும் எதிர்நீச்சல் ஆகிய இரு சீரியலுக்குமே தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றன. இரண்டு செரியல்களும் டிஆர்பி எப்போவும் மாஸ் காட்டும்.. ஒவ்வொரு வாரமும் சீரியலுக்கு டிஆர்பி ரேட்டிங் கொடுக்கப்படும். அந்த டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5யில் அதிகம்..
சன் மற்றும் விஜய் தொலைக்காட்சி சீரியல்கள் தான் இடம் பிடித்திருக்கும் . குறிப்பாக முதல் இடத்தை பிடிக்க சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் மற்றும் எதிர்நீச்சல் ஆகிய இரு சீரியலும் போட்டி போடும்.
அந்த வகையில் கடந்த சில வாரங்களாக டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 1-யில் இருந்த எதிர்நீச்சல் சீரியலை பின்னுக்கு தள்ளி தற்போது கயல் சீரியல் டாப் 1 இடத்திற்கு சென்றுள்ளது .12.48 புள்ளிகளைப் பெற்று கயல் சீரியல் முதல் இடத்தை பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து 11.55 புள்ளிகள் பெற்று எதிர்நீச்சல் சீரியல் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.