Ajith : தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் அஜித்குமார். இவர் சமீபகாலமாக ஆக்சன் படங்களை தேர்வு செய்தாலும் அதில் சமூக அக்கறை உள்ள கருத்துக்களை திணித்து நடித்து வருவதால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப அடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அப்படி இவர் கடைசியாக நடித்த துணிவு திரைப்படம் நல்ல விழிப்புணர்வு தரக்கூடிய ஒரு படமாக இருந்ததால் மக்கள் மத்தியில் அமோகமாக வரவேற்ப்பு பெற்று 230 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றி கண்டது. அடுத்து மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கான வேலைகள் மும்பரமாக போய்க்கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் அஜித்துடன் நடித்த பிரபல நடிகர் அப்பாஸ் அஜித் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்.. அஜித் ரொம்ப சின்சியரா இருப்பாரு.. என்னை போலவே தான் அவருடைய கேரக்டரும் Yes or No என ஓபன்னாக பதில் சொல்லிவிடுவார்.
அஜித் ஜாலியான டைப்பா என கேட்க.. அப்பாஸ் அவர் ஜாலின்னு சொல்ல முடியாது சினிமான்னு வந்துட்டா ரொம்ப சின்சியரா வேலை பார்ப்பார் ஆனா மத்த நேரத்துல ஜாலியா இருப்பார் என கூறினார். பொய் சொல்றதுக்கு செயற்கையாக சிரிக்கிறது இதெல்லாம் அவருகிட்ட இருக்காது.
டாக்டர் நடிக்கவே முடியாதுன்னு சொன்னாங்க ஆனா தன்னுடைய ரசிகர்களுக்காக அஜித் அந்த வலியையெல்லாம் பொறுத்துகிட்டு நடிக்கிறார் அதெல்லாம் ரொம்ப பெரிய விஷயம். அவருடைய கடின உழைப்பால் தான் இந்த இடத்தில் இருக்கிறார். என அஜித்தை பற்றி அப்பாஸ் புகழ்ந்து பேசிய வீடியோவை தல ரசிகர்கள் கொண்டாடி சோசியல் மீடியாவில் பரப்பி வருகின்றனர் .