மாஸாக வெளியான “சந்திரமுகி 2” படத்தின் இரண்டாவது பாடல்.!

Chandramukhi 2
Chandramukhi 2

Chandramukhi 2 Movie: சந்திரமுகி படத்தின் முதல் பாகத்தின் பிளாக்பஸ்டர் ஹிட்க்குப் பிறகு பி வாசு தற்போது இரண்டாவது பாகத்தினை இயக்கியுள்ளார். முதல் பாகத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இணைந்து நடித்திருந்த நிலையில் இதனை அடுத்து இரண்டாவது பாகத்தில் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத் மஹிமா நம்பியார், லட்சுமிமேனன், வடிவேலு, ராதிகா சரத்குமார், சுபிக்ஷா கிருஷ்ணன், ரவி மரியா ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்க தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்திருக்கிறார். முதல் பாகத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இரண்டாவது பாகம் உருவாகி வருவதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து வருகின்றனர்.

முதல் பாகத்தை விட இரண்டாவது பாகத்தை பிரம்மாண்டமாக உருவாக்க வேண்டும் என்பதற்காக ரூபாய் 40 கோடி பொருட்செளவில் சந்திரமுகி 2 உருவாகியுள்ளது. இந்த படம் வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்திருக்கும் நிலையில் பட குழுவினர்கள் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் முதல் பாடல் வெளியான நிலையில் இதனை தொடர் இரண்டாவது பாடல் இன்று வெளியாகும் என ஏற்கனவே பட குழுவினர்கள் அறிவித்திருந்தனர்.

அப்படி தற்பொழுது மாஸாக இருக்கும் குத்து பாடல் வெளியாகியுள்ளது இந்த பாடலை விவேக் எழுத, ஹரிகா நாராயணன், எஸ்பி சரவணன் இருவரும் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் கண்டிப்பாக ஹிட்டடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.