அதிரடியாக அறிமுகமாக இருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலின் இரண்டாவது பாகம்.! ப்ரோமோவால் மகிழ்ச்சியான ரசிகர்கள்…

விஜய் டிவியில் பிரைன் டைமில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியலான பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. மேலும் சில நாட்களாக இந்த சீரியல் முடியிருக்கும் என எதிர்பார்த்து வரும் நிலையில் அதற்குள் இந்த சீரியலின் இரண்டாம் பாகத்தை குறித்த வீடியோ தற்பொழுது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

அதாவத இந்த சீரியலின் இரண்டாவது பாகம் எதிர்பார்க்காத அளவிற்கு மிகவும் சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது எனவே விரைவில் விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலின் இரண்டாவது பாகத்தை அறிமுகப்படுத்த இருக்கிறது. அதில் தற்பொழுது பாரதி டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்டுக்காக காத்திருக்கும் நிலையில் மறுபடியும் வெண்பாவின் சூழ்ச்சியால் சிக்க இருக்கிறார்.

எனவே மாற்றி வைக்கப்பட்ட டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட் மூலம் மீண்டும் கண்ணம்மா மீது பழியை சுமத்தியதால் கோபத்தில் கண்ணம்மா ஊரை விட்டு கிளம்புகிறார் அப்பொழுது அவர்களை கொலை செய்ய வேண்டும் என்பதற்காக வெண்பா அவர்கள் செல்லும் காரை லாரியை வைத்து ஆக்சிடென்ட் செய்து விடுகிறார். இந்த ஆக்சிடெண்ட் மூலம் லட்சுமி மற்றும் ஹேமா இருவரும் பிரிந்து விடுகிறார்கள் எனவே இந்த நேரத்தில் லட்சுமி பணக்கார தம்பதியினர்கள் வளர்த்து அவளை டாக்டர் படிக்க வைத்து விடுகின்றனர்.

அதே நேரத்தில் ஹேமா ஆட்டோ டிரைவராக மாறிவிடுகிறார் இவர்களை இருவரும் கண்ணமாவுடன் இருந்த நினைவுகளை நினைத்தபடியே வாழ்ந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் ஒருமுறை லாரியில் லட்சுமியும் ஆட்டோவில் ஹேமாவும் வந்து கொண்டிருக்கும் பொழுது ஆக்சிடென்ட் ஆகிவிடுகிறது.

bharathikannama
bharathikannama

அதில் லட்சுமி மயங்கி விடுகிறார் உடனே ஆட்டோ டிரைவர் ஹேமா தன்னுடைய ஆட்டோவில் லட்சுமி யை மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார். இவர்கள் இருவரின் கையில் கே.எல் என்னும் பச்சை குத்தி இருக்கின்றது இவ்வாறு இரண்டாவது சீசனில் கதாநாயகிகளாக ஹேமா மற்றும் லட்சுமி கலக்க இருக்கிறார்கள் அது குறித்த வீடியோ தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.