நடிகர் சிம்பு உடல் எடை கூடி பார்ப்பதற்கே குண்டாக இருந்த பொழுது நடித்த பல திரைப்படங்கள் இவருக்கு தோல்வியை தொடர்ச்சியாக தந்து கொண்டே இருந்தது எப்படியாவது தனது உடல் எடையை குறைத்து பழைய நிலைமைக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் சிம்பு இரவு பகல் என்று கூட பார்க்காமல் உடற்பயிற்சி செய்து பின்பு நடித்த திரைப்படம் தான் ஈஸ்வரன் இந்த திரைப்படம் வெளியானபோது இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
தொடர்ந்து சிம்பு இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது மேலும் இந்த திரைப்படத்தில் சிம்பு மாஸாக நடித்துள்ளார் என்று தான் கூற வேண்டும்.
அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது.இந்த திரைப்படத்தின் முதல் நாள் வசூல் மட்டும் 8 கோடி வரை இருந்தது அதனைத் தொடர்ந்து தற்பொழுது இரண்டாவது நாளை சேர்த்து இந்த திரைப்படம் மொத்தமாக 14 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் தமிழ்நாட்டில் மட்டுமே சிம்புவிற்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் உலகம் முழுவதும் ஒரு வாரத்தில் பல கோடி வரை வசூல் செய்ய போகிறது எனவும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.
ஒரு சில ரசிகர்கள் சிம்பு அடுத்ததாக நடிக்கும் பல திரைப்படங்களை நாங்கள் மிக ஆவலுடன் எதிர் பார்த்து வருகிறோம் சிம்பு மாநாடு திரைப்படத்தில் எப்படி நடித்தாரோ அதே போல் பல திரைப்படங்களில் நடித்து வருவது எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது மற்ற நடிகர்களை விட சிம்புவின் நடிப்பு மிகவும் பிரம்மாண்டமாக இருக்கிறது எனவும் கூறி வருகிறார்கள்.