வெளியானது பொன்னியின் செல்வன் 2 படத்தின் செகண்ட் கிலிம்ஸ் வீடியோ.! எகிறும் எதிர்பார்ப்பு

ponniyin-selvan
ponniyin-selvan

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி மணிரத்தினம் எடுத்த பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியிடப் படக்குழு முடிவு செய்தது அதன்படி முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது. படத்தில் விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, கிஷோர்..

மற்றும் ஜெயராம், சாரா, அர்ஜுன், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ் என திரையுலக பட்டாளமே இந்த படத்தில் நடித்திருந்தது. படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று வசூலில் ருத்ரதாண்டவம் ஆடியது. கடைசி வரை மட்டுமே இந்த திரைப்படம் 500 கோடிக்கு மேல் வசூல் அள்ளி பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை படைத்தது.

பொன்னியின் செல்வன் 1 படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது படத்தின் எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கின்றது. படம் வருகின்ற ஏப்ரல் 28 ஆம் தேதி கோலாகலமாக ரிலீஸ் ஆக உள்ளது என சில மாதங்களுக்கு முன்பு படக்குழு அறிவித்துவிட்டது. இருந்தாலும் அவ்வபொழுதே சில சர்ச்சையான விஷயங்களும் சோசியல் மீடியாவில் வெளியாகின.

அதாவது பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகத்தில் நடிக்க நடிகர், நடிகைகள்  வருவதில் தாமதம்.. மேலும் சொன்ன தேதியில் வெளியாகுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என பல தகவல்கள் எல்லாம் வெளிவந்தன ஆனால் படக்குழுவோ வதந்திகளை நம்ப வேண்டாம் சொன்ன தேதியில் படம் ரிலீஸ் ஆகும் என கூறியது.

அதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது பொன்னியின் செல்வன் இரண்டாவது  பாகத்தின் அனுபவங்களை விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி போன்றவர்கள் பகிர்ந்து உள்ளனர். அந்த கிலிம்ஸ் வீடியோ ஒன்றை வெளியீட்டு ரசிகர்களுக்கு விருந்து கொடுத்துள்ளது இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்..