“நானே வருவேன்” படத்தில் பணியாற்றிய இரண்டாவது ஒளிப்பதிவாளரும் எஸ்கேப் – கடுப்பில் இருக்கும் தனுஷ், செல்வராகவன்.?

naane-varuven
naane-varuven

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி உள்ள அனைத்து திரைப்படங்களும் இதுவரை ஹிட் கிடைத்துள்ளன அதுபோல தற்போது இவர்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த கூட்டணி இணைந்துள்ளது ஆம் இவர்கள் இருவரும் இணைந்து நானே வருவேன் என்ற திரைப்படத்தில் பணியாற்றி வருகின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் அண்மையில் சென்னையில் நடைபெற்று வந்தது. செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் கடைசியாக மயக்கம் என்ன என்ற திரைப்படத்தில் பணியாற்றினர் அதனை தொடர்ந்து இந்த படத்தில் பணியாற்றுவதால் படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிக அளவில் இருக்கிறது.

படத்தின் கதை எப்படி இருக்கிறதோ அதற்கு ஏற்றார் போல இவர்கள் இருவரும் இணையும் படத்தின் பாடல்களும் இதுவரை மெகா ஹிட் அடித்து உள்ளன. இதனால் நானே வருவேன் படத்திலும் பாடல்கள் சிறப்பாக இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த கூட்டணி நானே வருவேன் திரைப்படத்தை தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்திலும் பணியாற்ற இருக்கிறது என்பது குறிபிடத்தக்கது.

இந்த நிலையில் நானே வருவேன் படத்தின் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமானவர் அரவிந்த் கிருஷ்ணா. அவர் இந்த படத்தில் இருந்து விலகியது அடுத்து யாமினி புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்டு பணிபுரிந்து வந்தார் அவரும் திடீரென இந்த படத்தில் இருந்து விலகியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

அவர் தனது பதிவில் கூறியிருப்பது இயக்குனர் செல்வராகவன் மற்றும் நானே வருவேன் குழுவுடன் பணிபுரிந்தது ஒரு மிகச்சிறந்த அனுபவம் தவிர்க்க முடியாத சில காரணங்களால் நான் இந்த படத்தில் இருந்து விலகிக்கொள்ள தீர்மானித்திருக்கிறேன் படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் உங்கள் ஆதரவுக்கு நன்றி என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறினார் யாமினி.