தமிழ் சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களை தந்து சிறந்த இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் வெற்றிமாறன் இவருடைய இயக்கத்தில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது இவருடைய இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் விடுதலை.
இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் நிலையில் முதல் பாகம் வருகின்ற மார்ச் மாதம் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் சில காலங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றிருந்த தனுஷ் பாடிய பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது.
இப்படிப்பட்ட நிலையில் மார்ச் மாதம் இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் தற்பொழுது வியாபாரம் தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் முதல் கட்டமாக இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை நிறுவனமும், சாட்டிலைட் உரிமையை கலைஞர் டிவியும் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து இந்த இரண்டுமே மிகப்பெரிய தொகைக்கு விற்பனையாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
வழக்கம்போல இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது இதனை அடுத்து அடுத்த கட்ட வியாபாரத்தின் தகவல்கள் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் ஹீரோவாக சூரி நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி, கௌதம் மேனன், பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், ராஜூ மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்த படத்தினை ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது இசைஞானி இளையராஜா இசை அமைப்பில் வேல்ராஜ் ஒடிப்பதிவில் இந்த படம் உருவாகி இருக்கும் நிலையில் விரைவில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது