தென்னிந்திய சினிமா உலகில் இருக்கும் முன்னணி நடிகைகள் பலரும் ஒவ்வொரு ஹிட் படம் கொடுக்கும் பொழுதும் நடிகர்கள் போல இவர்களும் தற்போது சம்பளத்தை உயர்த்த ஆரம்பித்துவிட்டனர் அந்த வகையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இப்பொழுது ஒரு படத்திற்கு 10 கோடி சம்பளம் வாங்குகிறார் அவரை தொடர்ந்து தற்போது சமந்தாவும்..
அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்கள் ஏற்கனவே இடம் பிடித்திருந்தார் தற்பொழுது வரைய அவர் ஒரு படத்திற்கு 2.5 கோடி சம்பளம் வாங்கி வந்ததாக சொல்லப்படுகிறது ஆனால் அண்மைக்காலமாக இவர் நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வெற்றி படங்கள் தான்.
இப்பொழுது கூட இவர் கைவசம் இருக்கும் படங்களும் சிறந்த படங்கள் அந்த வகையில் சமந்தா யசோதா, சகுந்தலம் உட்பட பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இது தவிர ஹிந்தி வெப் சீரியஸ் மற்றும் ஹிந்தியிலும் ஒன்று இரண்டு படங்களில் ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது இதனால் சமந்தாவின் மார்க்கெட் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது
இப்படி இருக்கின்ற நிலையில் நயன்தாரா 10 கோடி சம்பளம் வாங்கிய நிலையில் தற்போது அவரை தொடர்ந்து நடிகை சமந்தாவும் தனது சம்பளத்தை சற்று உயர்த்தி உள்ளார் ஆம் தற்பொழுது ஒரு கோடி அதிகமாக உயர்த்தி இப்போ ஒரு படத்திற்கு சுமார் 3.5 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது இது தயாரிப்பாளர்களுக்கு சற்று அதிர்ச்சியையும் கொடுத்து வருகிறதாம்.
நடிகர்கள் தான் ஒரு பக்கம் சம்பளத்தை ஏற்றுகிறார்கள் என்றால் மறுபக்கம் நீங்கள் வேறையா எனக் கூறி புலம்பி வருகின்றனர் சமந்தா இதுவரை 2.5 கோடி தான் சம்பளம் வாங்கி வந்தாராம் இப்பொழுது ஒரு கோடி உயர்த்தி 3.5 கோடி வாங்குவது தற்போது திரையுலகினரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. இச்செய்தி தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.